நான்கு வருடங்கள் முன் அவரை சந்தித்தேன்.
மூத்த பெண்ணை பொறியியல் படிப்பில் சேர்க்க வந்திருந்தபோது. என் தங்கையும் அப்போதுதான் சேர்ந்திருந்தாள்.
இரு பெண் குழந்தைகள். இளையவளுக்கு 10 வயது.
'Mother வர்லீங்களா?' என்றேன்.
'இல்லைங்க, நாலு வருசத்துக்கு முன்ன இறந்துட்டாங்க' என்றார்.
சிறு டவுன் பள்ளியில் ஆசிரியர். நேர்மையானவர். நேசமிகு மனைவி. இரு அன்பான குழந்தைகள். ஒற்றை நொடியில் அனைத்தும் கலைந்தது.
'உடம்பு சரியில்லன்னாங்க, ஆம்புலன்ஸ் எல்லாம் கூப்டோம். ப்ச்'.
தளரவில்லை, மறுமணம் பற்றிய சிந்தனையில்லை. உறவுகளின் தயவை எதிர்பார்க்காது தனியே வளர்க்கிறார் குழந்தைகளை, பணியில் தொடர்ந்துகொண்டே. பெரியவளுக்கு மெரிட்டில் சீட்.
அட்மிஷன் முடித்து, இரவு, பேருந்து நிலையத்தில் வழியனுப்பினேன். சிறிய கைப்பை மட்டுமே வைத்திருந்தார்.
அவர் பெண்ணையும் என் தங்கையையும் ஹாஸ்டலில் விட்டு திரும்புமுன் தங்கையிடம் 'பாவம் இவர்... குளிர்ல ப்ளாங்கெட் கூட இல்லாம போறார்... ரொம்ப மெல்லிசான க்ளாத்ல ஏதோ ஒன்னு மட்டும் பையிலேந்து எடுத்தார். தெரிஞ்சிருந்தா வீட்லேந்து ஒரு ப்ளாங்கெட் எடுத்து வந்திருக்கலாம்' என்றேன்.
'இல்லண்ணா, அவர் கையில் வச்சிருந்தது அவர் wife ஓட புடவைண்ணா. நைட் ட்ராவல் எப்போ பண்ணாலும் அதைத்தான் போத்திக்குவார்' என்றாள். இதை இப்பொழுது எழுதும்போதும் மனம் நெகிழ்கிறது...
காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி ஈருயிர் ஓருடல் எல்லாம் தாண்டி திருமண வாழ்வின் தினசரி சிக்கல்களில் குறட்டை விடுவதைக்கூட காரணம் காட்டி டைவர்ஸ் அப்ளை பண்ணும் இதே உலகில், இரவில் மனைவியின் சேலை தரும் அரவணைப்பில் உரையாடி கண்ணயர்ந்து ஊர் சேரும் இந்த மனிதர்... காதல் வெறும் வேதியியல் நிகழ்வு அல்ல என்பதன் சான்றாய்... இவர் ஒரு வேதியியல் ஆசிரியர்!
நொடியில் மாறிப்போன வானம், காலம் இங்கு காதல் நெஞ்சை கீறிப்போகும். ஆனாலும் துடிக்கும் நெஞ்சின் அரவணைப்பில் இன்னும் இரு இதயங்கள் உயிர்க்கும் (look at the picture closely!).
Could only shed a few tears for this g'man.
Endearing story. Thanks for sharing it.
பதிலளிநீக்கு