உறவெல்லாம் நஞ்சி போச்சி...
'உனக்கெதுக்கு உறவு? சம்பாதி, ஜாலியா இரு, யாரோடவேணா'
காற்று நச்சாகிப்போச்சி...
'சுவாசிக்காதே. மாஸ்க் போடு. ஆக்சிஜன் சிலிண்டர் முதுகில் மாட்டு. சுவாசி'
தண்ணீர் விசமாகிப்போச்சி...
'குடிக்காதே, கோலா குடி. குவாட்டர் அடி'
குளிக்க, துடைக்க தண்ணி இல்ல...
'குளிக்காதே, துடைக்காதே. சென்ட்டு அடிச்சிக்கோ. பேப்பர்ல தொடச்சிக்கோ'
மழைத்தண்ணி பூமிக்குள்ள போமாட்டேங்குது. எங்க பாத்தாலும் ப்ளாஸ்டிக்...
'பாக்காதே. நீ மட்டும் துணிப்பை கொண்டுபோ'
மண்ணு நஞ்சாச்சி. சாப்பாடு இல்ல...
'விவசாயம் பண்ணாதே. ஒண்ணும் தின்னாதே. பசியடங்க மாத்திரை போட்டுக்கோ'.
மரமெல்லாம் வெட்றாங்க. வெயில் வறுக்குது...
'இன்னும் முடியலை. வெளில வராதே. ஏ.சிக்குள்ள உக்காந்துக்கோ'
எல்லாரும் ஏ.சி போட்டா ஓசோன்ல ஓட்ட பெரிசாயிடுமே. இப்படியே போனா பூமி அழிஞ்சிடுமே?
'அழியட்டும். உனக்கென்ன போச்சி? மார்சுக்கு போ'.
கருத்துகள்
கருத்துரையிடுக