ஒற்றைப்பார்வையில் காதலாகி அப்பவே முடிவு பண்ணியாச்சி; 'ஸ்டெல்லாதான் எனக்கு wife ஆ வரணும்'. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை. ஆனால் அவளுக்கு நிகர் யாருமில்லை! சின்ன சிக்கல் 1: அவனுக்கு வயது அஞ்சி. சின்ன சிக்கல் 2: அவள் வயது பத்தொன்பது! பெரிய சிக்கல் 1: அலங்காரத்துக்கு அவனை கல்யாணம் பண்ணிகிட ஆசை. பெரிய சிக்கல் 2: அலங்காரம் வீட்டுக்காரரும் ஓகே சொல்லிட்டாரே! கிண்டர்கார்ட்டன் எல்லாம் வராத சிற்றூரில் பேபி கிளாசில் அவன் சேர்ந்த முதல் வாரத்திலயே ஸ்டெல்லா டீச்சர் மேல மையலாச்சி! அது பசங்க வழியா பள்ளிக்கூடத்துல வைரலாச்சி. அதுனால அந்த துறுதுறு பையனை 2 ஆம் வகுப்பு டீச்சர் அலங்காரத்துக்கும் ரொம்ப புடிச்சிப்போச்சி. அவனோட கல்யாண கனவுகளை நொறுக்குறதே அலங்காரத்துக்கு பொழப்பா போச்சி. இஸ்கூல் காரிடாரில் எங்க எப்ப பாத்தாலும் 'எப்ப கண்ணாலம் கட்டிக்கலாம்'னு தொரத்திகிட்டே இருந்தா பாவம் பையன் என்ன செய்வான்? உச்சா ப்ரேக்கு கூட எடுக்காம எத்தனை நாளு காலம் தள்ளுறது?! சின்ன மனசு, எம்புட்டு பாரந்தான் சொமக்குறது? என்னா பண்ணலாம்னு யோசனை பண்ணா ஒண்ணுமே தோணமாட்டேங்குது. திகிலுடனே நாட்...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!