புத்தன் ஏசு காந்தி சுமந்தது அவரவர் சிலுவை.
தானே மரம் தேர்ந்து தானே செதுக்கி தானே சுமந்தனர் தம் வாழ்நாள் முழுவதும்.
அவரவர் சிலுவை அவரவர் சுமக்கட்டும். அடுத்தவர் மரத்தை நாம் தேர்வு செய்யோம்.
மர பாரம் அவரவர் முடிவு. அடுத்தவர் மரத்தில் நம் பாரம் ஏற்றோம்.
இங்கு சிலுவைகள் இலவசம், (நெஞ்சிலல்லாது முதுகில் சுமந்தாலும்) ஆலிங்கனம்... பரவசமான தருணங்களும் பரிதவிக்கும் தருணங்களும் எப்போது நிகழும் என யாமறியோம்...
பித்தனாய், சித்தனாய், புத்தனாய்... சுமப்பவர் மாறலாம், சிலுவைகள் மாறா.
சிலுவைகள் சுமக்காத மனிதர் என்று எவரும் இல்லை. அவரவர் சிலுவை அவரவருக்கே!
முக்காலத்திலும் உண்மை!
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு