முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தோட்டா விவசாயம்!

இலக்கை தாண்டிய தோட்டா; அட விவசாயம்! தோடா!! துப்பாக்கியின் விசை சுண்டப்பட்டதும் இலக்கு நோக்கி சீறிப்பாயும் தோட்டா, இலக்கை துளைக்கையில் அதிலேயே மாட்டிக்கொள்ளும்; அல்லது, துளைத்தபின் விசையிழந்து விழுந்துவிடும். நம்மில் அநேகரின் வாழ்வு இவ்விதமே. ஆனால், இலக்கை துளைத்தபின் அது தவறான இலக்கு என்ற புரிதலும், துளைத்து வெளியேறியபின்னும் விசை குறையாமல் உந்தினாலும், அந்த தோட்டாவின் பயணம் எப்படி இருக்கும்? எதை நோக்கி இருக்கும்? ஐ.டி துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட தோட்டாக்கள் பல, சில பல இலக்குகளை வெகு வேகமாக துளைத்தபின்னும் விசை குறையாதிருந்தால்... எங்கெங்கோ சுற்றி பின் வேளாண்மையில் ஐக்கியமாகி விடுகின்றன. எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி விவசாயம், இவர்கள் செய்யும் வேளாண்மை, பிற்காலத்தில் தோட்டா வேளாண்மை (Bullet Agriculture) என்றும் அறியப்படலாம். 'பத்து இருபது நாட்டு மாடு வாங்குறோம். பால் பண்ணை நடத்துறோம்; ஒன்லி A2 ப்ராடக்ட்ஸ'் என்பது முதல், 'பாலி ஹவுஸ் பண்றோம், வெள்ளரி / குடை மிளகாய் வளர்க்கிறோம், எக்ஸ்போர்ட் பண்றோம்' என்பது வரை, பணம் சம்பாதிப்பதை மையமாக

சிறு வெடிப்பு (THIS is NOT a Big Bang!)

" தூக்கம் பிடிக்கவில்லை. தூங்க முடியவில்லை. கண் மூடிய நொடிகளிலெல்லாம் காலத்தின் கொடுங்கனவுகள் கூத்தாடும்; உறக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட நிலையிலும்கூட பதறவைக்கும். கனவல்ல அவை, நிஜத்தின் எச்சங்கள். வெட்டுப்பட்டு, குத்துப்பட்டு, மிதிபட்டு, அறுபட்டு, எரிபட்டு, மூச்சுத்திணறி, புதைபட்டு... கூட்டம் கூட்டமாய் வீழ்வதாய் கனவுகள்... உறங்கவிடாத கனவுகள்... அமைதியாய் மகிழ்வாய் உற்றமும் சுற்றமுமாய் வாழ்வான வாழ்வு வாழ்ந்தவர்கள். வண்ணங்களும் இசையுமாய் வாழ்வு, உயிர் வளர்த்த வாழ்வு, செழித்த வாழ்வு... சிதைந்த வாழ்வு... ஏனிந்தக்கனவுகள்? ஏனிந்த அழிவு? எதனால் அழிந்தோம்?  ஏன்? ஏன்? ஏன்? கனவுகளில் என்னவோ விடைகள் மட்டும் கிடைப்பதே இல்லை... எத்தனை தலைமுறையாய் இந்த முடிவற்ற போர்?  ஆனாலும் போராடுவேன். மீண்டும் என் உற்றமும் சுற்றமும் வளர்ப்பேன். உயிர் தழைக்கும், மகிழ்வு மீளும். இன்று எனதே! நாளை நமதே!! " பெருநகர வீடொன்றில் கற்கள் பதித்து பூசி மெழுகிய தளத்தின் சிறு வெடிப்பில், கான்க்ரீட் உலகின் பாரம் சுமந்தவண்ணம் உறங்கிக்கிடந்த கானகத்தின் விதையொன்

2.0 ரிவ்யூ - குருவீ! ஒன்ன சுட்டுட்டாங்களா குருவீஈஈஈஈஈ!

"குருவீ!! ஒன்ன சுட்டுட்டாங்களா குருவீஈஈஈஈஈஈஈ!!!" அது குணா... 'குருவீ! ஒன்ன சுட்டுட்டாங்களா குருவீஈஈஈஈஈஈஈ! அவனுங்கள நான் சும்மா விட மாட்டேன் குருவீ!!!!!' இது 2.0 :-) என்ன... நல்லவன வில்லனாக்கி... கொன்னுட்டானுங்க குருவீ!!!!!  அசுர உழைப்பு... ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களில் உலகின் முக்கிய பெருநகரமென நியூயார்க் நகரத்திலேயே அத்தனை வில்லன்களும் பேரேடு நடத்துவார்கள். நகரின் பெயரை மட்டும் கோதாம் சிட்டி என்று மாற்றியிருப்பார்கள். கோலிவுட்டில் சென்னை சிட்டி சென்னை சிட்டியாகவே வருகிறது. கூடவே ச்சிட்டி, குட்டி :-) வலுவான தீமை ஒன்றை மையப்புள்ளியாக்கி அற்புதமான Flashback கற்பனை சேர்த்து நெத்தியடி அடித்த குழு, அதற்கு வலுவானதொரு Out of the Box தீர்வை படத்திலாவது தந்திருந்தால் இது உலகப்படமாக மாறியிருக்கும். ஆனால் கோலிவுட் formula ப்ளஸ் ஹீரோயிசத்தில் சிக்கி செல்லு செல்லாய் சிதறிப்போச்சே! 600 கோடி ரூபாயில் உலக அரங்கில் சங்கர் தன் விசிட்டிங் கார்டை 3 D இல் வைத்திருக்கிறார். அவரது விஷன் ப்ளஸ் உழைப்புக்காக மட்டுமே பார்க்கலாம் ஒருமுறை. ஆனாலும் எவ்

தாவரக்குருடு / Plant Blindness - Bilingual post

தாவரக்குருடு / Plant Blindness - Bilingual post (English writeup follows the Tamil part). நிறக்குருடு என்ற குறைபாடு பற்றி நம்மில் அநேகருக்கு ஓரளவு தெரிந்திருக்கும். இந்தக்குறைபாடு உள்ளவர்களால் சில நிறங்களை அந்த நிறங்களாக காண முடியாது. சிவப்பு நிறம் சிலருக்கு பச்சை நிறமாக தெரியலாம், இத்யாதி. சரி, தாவரக்குருடு கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இன்று சிற்றூர் முதல் பேரூர் வரை உள்ள எல்லா வயதினருக்கும் இந்தக்குறைபாடு உள்ளது.  இவர்களுக்கு இவர்களை சுற்றியுள்ள தாவரங்களை 'தெரியாது', கண்ணால் பார்த்தாலும்! பரபரப்பாக வாழ்வு. இந்த வயதில் உழைக்கவில்லை என்றால் எந்த வயதில்? காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என பல வகைகளில் இந்த குறைபாடு வெகுவேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.