முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாவரக்குருடு / Plant Blindness - Bilingual post








































































































தாவரக்குருடு / Plant Blindness - Bilingual post
(English writeup follows the Tamil part).

நிறக்குருடு என்ற குறைபாடு பற்றி நம்மில் அநேகருக்கு ஓரளவு தெரிந்திருக்கும். இந்தக்குறைபாடு உள்ளவர்களால் சில நிறங்களை அந்த நிறங்களாக காண முடியாது. சிவப்பு நிறம் சிலருக்கு பச்சை நிறமாக தெரியலாம், இத்யாதி.

சரி, தாவரக்குருடு கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இன்று சிற்றூர் முதல் பேரூர் வரை உள்ள எல்லா வயதினருக்கும் இந்தக்குறைபாடு உள்ளது. 

இவர்களுக்கு இவர்களை சுற்றியுள்ள தாவரங்களை 'தெரியாது', கண்ணால் பார்த்தாலும்!

பரபரப்பாக வாழ்வு. இந்த வயதில் உழைக்கவில்லை என்றால் எந்த வயதில்? காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என பல வகைகளில் இந்த குறைபாடு வெகுவேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.

'அரிசி... நெல்லுலேந்தா வருது?!'

'நெல்லு... செடியா? மரமா?' என்பதாகவே குழந்தைகள் உலகம் சுறுங்கிப்போனது.

காடுகள் அழித்து நகரங்கள் வளர்ந்தாலும், இந்த நகரங்கள் அசந்திருக்கும் இடங்களில் எல்லாம் கானகங்கள் பதுங்கியிருக்கின்றன. உங்கள் குடியிருப்பிற்கு / வீட்டுக்கு / ஜன்னலுக்கு வெளியே...

பார்க்கத்தான் நேரமில்லை.

இந்த தாவரக்குருடு, சரி செய்யக்கூடிய வியாதிதான். நாம் மறுபடி குழந்தையாகி விழி விரித்து நம்மைச்சுற்றியுள்ள மண்பரப்பை உற்று நோக்கினாலே போதும். கண்டுகொள்ள காத்திருக்குது கானகம் :-)

பெருநகரங்களில் உள்ளவர்களுக்கு இந்த குறைபாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று ஒரு நட்பின் உந்துதலால் 'மருந்தை' ஆவணப்படுத்திக்கொண்டிருக்கிறேன். அதிலிருந்து ஒரு பகுதியை இங்கு பகிர்கிறேன். விரைவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் இப்படத்தொகுப்பை பகிர்ந்து, வியாதி நீக்க எண்ணியுள்ளேன்.

நிறைய படங்கள், பாத்ததும் 'சூப்பரா இருக்கே! எந்த ப்ளாண்ட் என்ன பேரு?'ன்னு கேட்கத்தோன்றுகிறதா, 

பெயரில் என்னங்க இருக்கு?!

Colorblind is a condition which limits the colors seen by affected persons. We know this much.

Plant Blindness? Anybody heard this term before?

As we keep adding layers of separation between us and Nature, most of us forgot to 'look' around us. We don't even have time to think of doing this... Basically, we are becoming Plantblind.

It is a pity.

A friend suggested that I put up a slide show sort of program to help cure people of this illness. I obliged. Soon to be shared with kids in Schools and Colleges to help them regain that child-like wonder of looking at Nature as if it is the first time... All we have to do is to step out of our enclosures then and there, just to say 'Hello' to these folks hanging around to remind us the glorious forest our place once was...

You may wonder why I haven't included the names for the plants included here. What's in the name, anyway?! Just keep looking :-)

கருத்துகள்

  1. Unbelievable, and well spent on organizing plants in different period.Good sense of photography with nature. In a nut shell bring the tiny Todds out of room.Great effect. Congratulations

    பதிலளிநீக்கு
  2. Thank you. It is a pity that kids of generation z, fully digitally connected. are yet to connect with nature...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்