---
இது லாங் டிஸ்டன்ஸ் பஸ் ட்ரிப்பு, நெறைய ஸ்டாப்புல நின்னு நின்னுதான் போவும், பாத்துகிடுங்க!
---
ஒற்றைப்பார்வையில் காதலாகி அப்பவே முடிவு பண்ணிட்டான்; 'ஸ்டெல்லாதான் எனக்கு wife ஆ வரணும்'.
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை. ஆனால் அவளுக்கு நிகர் யாருமில்லை!
சின்ன சிக்கல் 1: அவனுக்கு வயது அஞ்சி.
சின்ன சிக்கல் 2: அவள் வயசு பத்தொன்பது!
பெரிய சிக்கல் 1: அலங்காரத்துக்கு அவனை கல்யாணம் பண்ணிகிட ஆசை.
பெரிய சிக்கல் 2: அலங்காரம் வீட்டுக்காரரும் ஓகே சொல்லிட்டாரே!
கிண்டர்கார்ட்டன் எல்லாம் வராத சிற்றூரில் பேபி கிளாசில் அவன் சேர்ந்த முதல் வாரத்திலயே ஸ்டெல்லா டீச்சர் மேல மையலாச்சி!
அது பசங்க வழியா பள்ளிக்கூடத்துல வைரலாச்சி. அதுனால அந்த துறுதுறு பையனை 2 ஆம் வகுப்பு டீச்சர் அலங்காரத்துக்கும் ரொம்ப புடிச்சிப்போச்சி.
அவனோட கல்யாண கனவுகளை நொறுக்குறதே அலங்காரத்துக்கு பொழப்பா போச்சி. இஸ்கூல் காரிடாரில் எங்க எப்ப பாத்தாலும் 'எப்ப கண்ணாலம் கட்டிக்கலாம்'னு தொரத்திகிட்டே இருந்தா பாவம் பையன் என்னதான் செய்வான்? அலங்காரம் கண்ணில பட்டுட்டா வம்பாச்சேன்னு... உச்சா ப்ரேக்கு கூட எடுக்காம எத்தனை நாளுதான் காலம் தள்ளுறது?!
சின்ன மனசு, எம்புட்டு பாரந்தான் சொமக்குறது? என்னா பண்ணலாம்னு யோசனை பண்ணா ஒண்ணுமே தோணமாட்டேங்குது. திகிலுடனே நாட்கள் கழிய க்ளைமாக்சும் வந்தது...
'திங்கள் கிழமை கல்யாணம். ஓகேவா?!'
என முந்தைய வெள்ளிக்கிழமை சாயந்திரம் ஸ்கூல் முடிந்து காரிடாரில் எதிர்பாராத தருணத்தில் அலங்காரத்தை க்ராஸ் பண்ணுகையில் அவர் கொளுத்திப்போட... பொட்டுத்தூக்கமில்லை வீக்கெண்டு பூராம்!
'அப்பாகிட்ட சொல்லிடலாமா?...
அடிப்பாரே... வேணாம்...
உடம்பு சரியில்லன்னு லீவு போட்டுடலாமா?
அம்மா கண்டுபுடிச்சிடுவாரே...'
ஞாயிறு இரவு அவசர வட்டமேசை மாநாடு கூட்டப்பட்டது தெருமுனையில்; அரை டவுசரில் நண்பர்கள் அனைவரும் ஆஜர். ஏகப்பட்ட விவாதங்களுக்குப்பிறகு(!) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது;
'சொல்லிடு; புடிக்கலன்னு சொல்லிடு. சொல்லிட்டு நிக்காம எங்கணா ஓடிடு!'.
இப்படியாக நண்பர்களால் தைரியம் பெற்றவன் பதுங்கிப்பதுங்கி திங்கள் காலையில் பள்ளியில் நுழைந்தான்...
ஆச்சி, காலை போய் மதியம் வந்து சாயங்காலமும் ஆச்சி. அலங்காரத்தை காணோம்!
ஏகப்பட்ட குழப்பங்களோட வீடு திரும்பினவன் நிம்மதியா தூங்க ரெண்டு நாள் ஆச்சி, 'அலங்காரம் டீச்சர் ஸ்கூல் மாத்திட்டு போய்ட்டாங்க' என்று அவன் நண்பன் அவன் காதில் சைரன் ஊதினதுக்கு அப்பால! (இந்த நொடியிலும் அந்த ரீங்காரம் காதில கேக்குதே!).
'அப்புறம் என்ன ஆச்சி? ஸ்டெல்லாவுக்குதான் ரூட்டு க்ளியராச்சே' என்கிறீர்களா?
வசுமதி வந்தாச்சே! பேபி க்ளாசில புது பொண்ணு, ஸ்லைட்டா மூக்கு ஒழுகிகிட்டு ஆனா ஜொலிக்கிற அழகோட!
அவன் = நான் :-)
தொடரும்.
பின் குறிப்பு: பல ஆண்டுகள் பின்பு ப்ரேமம் மலர் டீச்சரை ப்ரேமில் கண்ட நொடியில் 'ஹேய்! நம்ம ஸ்டெல்லா!' என்றான், எனக்குள் அவன். உண்மைதான், சாய் பல்லவி இன்னும் இளைத்திருந்தால்... முகத்தில் வறுமையின் மென்சோகம் எப்போதும் அப்பியிருந்தால்... ஸ்டெல்லாவேதான்!)

கருத்துகள்
கருத்துரையிடுக