முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாரதிக்கு எழுத வாய்ப்பு கிட்டாத பாடல்!

  தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதியவுயி ராக்கி - எனக் கேதுங் கவலையறச் செய்து - மதி தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய் என எழுதிய பாரதி, இந்தியா விடுதலை அடைந்தபின்னும் உயிரோடிருந்தால் நானிலம் செழிப்பதற்காய் அவன் எழுதியிருக்கக்கூடிய  பாடல் இதோ! " தேடி விதைகள்பல நிதஞ்சேர்த்து - பல சின்னஞ்சிறு கன்றுகளாய் மாற்றி - மனம் மகிழ்ந்து அன்புமிக உழன்று - பிறர் இளைப்பாற பல கன்றுகள் நட்டு வளர்த்து- அன்பு கூடிக் கிழப்பருவ மெய்தி - நல்மரத்தின் முதிரிலைபோல் மெல்லத்தரையிறங்கி மாயும் - சில அற்புத மனிதரைப் போலே - நான் விதையாய் வீழ்வே னென்று நினைந்து செய்வேன்  தாயே! " என் மனம் உருவாக்கிய paralle Universe ...

வெத, இவர் போட்டது!

  தற்செயலாகத்தான் எனக்கு அறிமுகமானார். மன்னார்குடியில் ஏதோ ஒரு பள்ளியில் ஒரு சிவராத்திரி அன்று வேஷ்டி திரை கட்டி அதில் ஒரு படம் காட்டினார்கள். 'அழைத்து வரவி்ல்லை, இழுத்து வந்திருக்கிறார்கள்' என சங்கிலியாய் பிணைக்கப்பட்டு அரசவையில் அரசன் முன் அடிபணியா சீற்றத்தோடு அவர் முழங்கத்தொடங்கிய அந்த நொடியில் தமிழ் மீது நான் கொண்ட காதல் இன்றும் தொடர்கிறது. அந்தப்படம் முடியும்போது அரை டவுசர் பார்வையாளர்கள் நாங்கள் அனைவரும் சிவாஜி ரசிகர்களாக மாறிவிட்டிருந்தோம். அதன் பின் சாரங்கதாரா, தூக்குதூக்கி, திருவிளையாடல், குங்குமம், பராசக்தி (ஆமாங்க, படம் வெளிவந்த பொழுது காணத்தவறியிருந்தால் அல்லது நாங்கள் பிறப்பதற்கு முன்னால் ரிலீசான படங்களை பின்னால் ஏதாவது ஓரு வருடம் நாங்கள் படித்த ஊரில் சினிமா தியேட்டரில் அல்லது டென்டு கொட்டாயில் சிவராத்திரி, பொங்கல், முழாண்டு விடுமுறை போன்ற விஷேச நாட்களில் படம் வந்தால் மட்டுமே பார்க்கும் வாய்ப்பு பெற்ற தலைமுறை நாங்கள்!) போன்ற படங்கள் அவரது நடிப்பின் உயரத்தால் எங்களை தொடர்ந்து வசீகரிக்க, அவரது வசன உச்சரிப்பு எங்கள் தமிழார்வத்தையும் தொடர்ந்து தூண்டியது. ஒரு விதத்தில் ...

பத்தாய நெல்லும் ஆண்டாள் பாசுரமும்

மருதவனத்து நான்கு கட்டு வீட்டில் கொல்லைப்புறத்திலிருந்து ரிவர்ஸில் வந்தால் அடுக்களை பகுதி தாண்டி ஆளோடி என்கிற பகுதி இருந்தது. விவசாய குடும்பத்தின் வருடாந்தார அறுவடை நெல்மணிகள் ஒரு பெரிய மரத்தாலான பத்தாயத்தில் பாதுகாப்பாக இருக்கும் இடம். பத்தாய பகுதி தாண்டி முன்னேறினால் இரண்டாம் கட்டு பகுதி, தாத்தா புழங்கும் இடம். தாண்டி முன்னேறினால் திண்ணைப்பகுதி, வீட்டின் முதல் பகுதி. திண்ணையின் ஒருபுறம் கூண்டு வண்டி நிறுத்தியிருக்கும். உழவுப்பணியில் ஈடுபடுபவர்கள் பணிக்காலத்தில் தினமும் பாட்டி கையால் கொல்லைப்புறம் கேணியடி தளத்தில் அமர்ந்து உண்பர். அவர்களுக்கு அதை தாண்டிய வீட்டு பகுதிகளுக்கு அனுமதி கிடையாது. நினைவு தெரியத்தொடங்கிய காலத்தில் இது ஒரு விசித்திரமான அமைப்பாக தோன்றியது...அவர்கள் அறுவடை செய்து புடைத்து தூசு நீக்கி தரும் நெல்மணிகள் மட்டும் வீட்டுப்பத்தாயம் வரை வருகையில் அவர்களுக்கு மட்டும் ஏன் தடை என்கிற கேள்வி குடைந்துகொண்டே இருந்தது. தாத்தா ஒரு பலாப்பழ மனிதர். கரடு முரடான வெளித்தோற்றம், ஆனால் உள்ளுள் அன்பு கசியும் மனிதர். அவர் மேல்சட்டை அணிந்து நான் பார்த்ததில்லை. இடுப்பில் வேஷ்டி மீது பச்சை...