முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எந்து ஒரு மயக்கம்!

  பாலகுமாரனின் அகல்யா, சிவசுவின் அகல்யா, மரண வேதனையில் சிவசுவை கண்களால் விளித்து ஒரு பாடல் படிக்கச்சொல்கிறாள். சிவசு படிக்கிறான்: "ஈலோக கோளத்தில் ஒரு சிரா சந்த்யயில் இன்னும் ஒலிக்க நாம் கண்டு முட்டி, தெரியாமல் முட்டிக்கொண்டது மாதிரிதானே  சந்தித்தோம். தெரியாமல் முட்டிக்கொண்டு, சிதறினது மாதிரிதானே பிரிந்தோம். மறுபடி அவ்விதமே நிகழட்டும். போய்வா அகல்யா, ஆல் த பெஸ்ட். வேறெங்கேனும் எப்போதாவது சந்திக்க முடிகிறதா என்று பார்ப்போம். இந்தக்கோளத்திலோ அல்லது வேறு எங்கானுமா பார்க்கமுடிகிறதா என்று தவிப்போம்.  பார்த்தால் புரிந்துகொள்வோம்!" முதல்முதலாய் உங்களது கனவுப்பிரதேசத்துக்கு பயணம் செல்கிறீர்கள். அந்த இடம் வரை பஸ்ஸோ ரயிலோ செல்லும் என்பதை தவிற வேறொன்றும் தெரியாது உங்களுக்கு. அந்த ஊர் போனதும் என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கும்? அதற்கெல்லாம் என்னென்ன தகவல்கள் வேண்டியிருக்கும்? சுச்சூ, கக்கா போவதற்கான இடம் முதல், என்னென்ன காணலாம்? எங்கெங்கு காணலாம்? எந்த வாகனத்தில் போகமுடியும்? எப்போ? நல்ல உணவு எங்கு கிடைக்கும்? நல்ல தேநீர் / சிற்றுண்டி எங்கு கிடைக்கும்? நல்ல விடுதி எங்குள்ளது? நினைவுப்ப

வெந்து தணிந்தது காடு

  சோலைவனம் பாலையானதே! மெட்ராஸ் சென்னை ஆயாச்சி. பாம்பே மும்பை ஆயாச்சி. கல்கத்தா கொல்கொத்தா ஆயாச்சி. பேங்களூர் பங்களூரு ஆயாச்சி. நியூ டெல்ஹி நயீ தில்லி ஆயாச்சி. பிரிட்டிஷ் அடிமைத்தளைகளில் இருந்து விடுபட்டபின் நாம் செய்த இந்த பெயர் மாற்றங்கள் நாம் நம் வேர்களை மீட்டெடுக்க முனைப்புடன் இருப்பதை உலகுக்கு உணர்த்தியது. ஏனோ தெரியவில்லை, நாம் நம் சுய அடையாளத்தை மீட்டெடுப்பது இந்த பெயர் மாற்றங்களுடன் நின்றுபோய்விட்டது... அடிமை ஆதிக்கத்தின் அடையாளங்களை அழிக்க நினைத்து, வெறும் தோல் அளவிலேயே மாற்றங்கள் நிகழ்த்தி, "இதுதான் புதிய இந்தியா, தேச பக்தி இந்தியா" என மார் தட்டி, தேச பக்தியை பெருக்க பீட்சாவும் பர்கரும் கோலாவும் உண்டு வல்லரசுக்கனவில் நம் நாடும் அமெரிக்கா போல, நம் மக்களும் அமெரிக்கர்கள் போல எல்லா விதங்களிலும் மாறிக்கொண்டிருக்கிறோம். ஒரு ஜல்லிக்கட்டு போராட்ட நிகழ்வு, அதன் பின் சில காலம் கோலா பர்கர் பீட்சா வேண்டாமென மயான வைராக்யம். போராட்டத்தின் ஈர்ப்பு குறைந்தவுடன் மீண்டும் பர்கர் கோலா பீட்ஸா ஷவர்மா என ஓடிக்கொண்டிருக்கிறோம். சுதந்திர இந்தியாவின் மலைத்தொடர்கள், நமது நுரையீரலான மலைத

இதனால் சகலமானவர்களுக்கும்...

  முரண்கள் நிறைந்த ஒரு பெருஞ்சமூகத்தில் சீராய் இயங்கும் சில புள்ளிகளில் இவனும் ஒருவன். தன் பெயரை வெளியிட வேண்டாமென கேட்டுக்கொண்டதால் இவனை "இவன்" என்றே அழைக்கலாம். கண் முன்னே வாழ்வின் தடம் பிறழ்வதை கவனிக்கும் வயது இல்லாவிட்டாலும் தன்னைச்சுற்றி  ஏதோ தவறாகிக்கொண்டிருப்பதை இவனால் சிறு வயதிலேயே உணர முடிந்திருந்தது, ஆனால் பகிற, வினா எழுப்ப, விடை தர, உரையாட யாருமில்லை. இத்தனைக்கும் அவன் வசித்த ஊரில் அவன் வயது சிறுவர்கள் ஏராளமாய் இருந்தாலும் இவன் பேச முயன்ற முரண்கள் யாருக்கும் புரிபடவில்லை. எனவே தனிமையில் தன்னோடு தானே உரையாடத்தொடங்கினான். அன்று தொடங்கியது, பல ஆண்டுகள் தொடர்ந்தது. ஒவ்வொரு கனத்த சிக்கலும் சமூகத்தில் முளைத்து வளரும்போதெல்லாம் எங்காவது ஒரு தேநீர் விடுதியில் இவன் தனியே ஆழ்ந்த சிந்தனையில் மௌனமாய் உரையாடிக்கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.அப்படி சந்தித்திருந்தாலும் மனதில் பதியாமல் நீங்கள் நகர்ந்து, கடந்து சென்றிருக்கவே வாய்ப்பு மிகுதி.  பல காலம் விலையின்றி கிடைத்த அனைத்தும் இன்று விலை தந்தாலும் கிடைக்காதது, விலையுயர்ந்தவை என அறிமுகமானவை பல விலை மலிவாய் அனைவர்க்கு