முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நல்லதொரு கவிதை

நல்லதொரு கவிதை தன்னைத்தானே எழுதிக்கொள்ளும் நேரமிது. காகிதத்தில் ஒற்றை எழுத்து விதையாக முளைத்து கவிதையாய் வளர்ந்து முற்றுப்புள்ளி தேடும் நேரம் ஒரு அபூர்வ தருணம். எழுதியவரின் உணர்வுகளை தாங்கி, வாசிப்பவரிடம் சேதமின்றி சேர்க்க காத்திருக்குது கனமாய் காகிதம். காகிதம் செய்ய இழைகள் வேண்டி மரித்த மரங்களின் ஆன்மாக்கள்அனைத்தும் வாசித்து முடித்த பின்புதான் இந்தக்கவிதை... வாசிப்பவருக்கு தரப்படும். கவிதையெங்கும் விரைந்தோடும் எழுத்துக்களை கயறுபோல் இறுகப்பிணைத்துக்கொண்டிருக்கிறது (கவிதை) வரிகள். வகுப்பு வரிசை பிள்ளைகள் போல வரி வரியாய் காத்திருக்கும் கவிதையின் சொற்களை வரிசை மாற்ற யாருக்கும் இந்தக்கவிதை அனுமதி தருவதில்லை, அவர் எழுதியவரே ஆனாலும். நல்ல கவிதை கால் முளைத்தோ இறகு முளைத்தோ பல்லக்கில் ஏறியோ  வாசிப்பவரின் மனவெளியெங்கும் உலா வருகையில் தூப தீப ஆராதனைகள் அதை ஒருபோதும் சலனப்படுத்துவதில்லை. ஓசைகளும் கற்பூர வாசமும் காற்றில் கரைந்துபோய் மௌனம் கதகதப்பாய் இந்தக்கவிதையை போர்த்திக்கொண்ட பின்பும் (இந்தக்கவிதை) உறங்குவதில்லை. வாசிப்பவரின் ஆழ்ந்த உறக்கத்திலும் மௌனமாய் விழித்துக்கொண்டு அவரை வாசித்துக்கொண்டிரு

நீ சிரித்தால்

நிற்கும் இடமெல்லாம்  ம ழை மறித்து குடைபிடிக்கும் மரம்   மழை நின்றபின்  தன் வேரடிக்கு  மட்டும்  மழை பொழிந்துகொள்ளும் அதிசயம் நிகழும் ஒவ்வொரு மழையிலும். எந்த வேருக்கு எவ்வளவு நீர் தேவை என்பதை மரம் அறியும்;  சல்லி வேர்கள் மண்ணடி ஈரத்தில் மூழ்கி குளிர,  ஆணி வேருக்கு  மிடறு மிடறாய் போதுமென்பதை மரம் அறியும். மழைக்கு மரத்தடியில் ஒதுங்கி, மழை நின்றபின்பு உள்வடியும் மழைநீரில் சிரம் நனைந்து உடல் நனைந்து உயிர் நனையும் அதிசய உணர்வனுபவம், மரம் மட்டுமே தரக்கூடிய வாழ்வனுபவம். அதிலும் அகலக்குடை பிடிக்கும் மரத்திற்கு அளவாய் மட்டுமே வேரடி நீர் என்றும் இடைவெளி நிறைந்த ஓட்டைக்குடை பிடிக்கும் மரத்திற்கு கூடுதலாய் நீரென்றும் எதுவோ என்றோ வகுத்த விதி, மாறாமல் சுமந்து நிற்குது மரம் இன்றும்! மரத்தி்ற்குள் சூட்சுமம் பொதித்தது எதுவோ அதுவே மண் உண்ணும் நீரின் அளவையும் மண்ணுள்ளே பொதி்த்து வைத்திருக்குது ரகசியமாய். உயிருள்ள அனைத்தையுமே ஜடப்பொருளாய் கற்பிதம் செய்வதையே நம் வாழ்வியல் தூக்கிப்பிடிக்க, நமக்குள்ளேயும் பொதிந்திருக்கும் ஏராளமான சூட்சுமங்கள் உணரப்படாமலே நமக்குள்ளே நித்தமொன்றாய் மரித்துப்போக, புதை நிலங்களாய் ச

நன்றி சொல்ல சொற்களில்லை

  முப்பத்தைந்து வயது இருக்கும் அந்த பெண்ணுக்கு. கைத்தாங்கலாய் ஆட்டோவில் இருந்து தன் பதின் வயது மகனை சிரமப்பட்டு இறக்கி, கால்கள் துவளத்துவள அவனை நடக்க வைத்து நம்பிக்கை பிடித்து அழைத்து வருகிறார் வாரத்தில் மூன்று நாட்கள், ஒவ்வொரு வாரமும். மன, உடல் வளர்ச்சி இரண்டுமே குறைபாடாம். பதின் வயது மகனுக்கு பேச்சு வராதாம். அமானுஷ்யமான ஓசையில் தனது சகல உணர்வுகளையும் அந்த சிறுவன் வெளிப்படுத்துகிறான். மீசை அரும்பத்தொடங்கியிருக்கிறது அவனுக்கு. பத்து பதினைந்து ஆண்டுகளாக தவமாய் சுமந்து அலைகிறார் அவனை எப்படியாவது குணப்படுத்தலாம் என. ஒரு holistic healing centre இல் இப்போது சிகிச்சை அவனுக்கு, வாரத்தில் மூன்று நாட்கள். பகல் பொழுதில் வேலைக்கு சென்றுவிட்டு மாலைகளில் அழைத்து வருகிறார். ஒரு முறை கூட ஆண்கள் யாரும் துணைக்கு வந்ததில்லை.  ஔவை எழுதிய அரிதரிது மானிடர் ஆதல் அரிது மா னிடர் ஆயினும் கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான்செயல் அரிது என்கிற பாடலை மனம் வெம்பி இப்படி முடிக்கத்தோன்றியது இவ