முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விதிய மாத்துங்க சாமீ!

  நுனிக்கரும்பு இனிக்க காத்திருந்தவனும் இனிப்பு கிட்டி போயாச்சு சிவலோகத்துக்கு நெஞ்சிலே கோயில் கட்டிய பூசலானும் அடைந்தாயிற்று சிவ பாத ப்ராப்தம். 'நீ உருவாக்கிய ஞெகிழி மட்கி மண்ணானால்தான் உனக்கென் பாதத்தில் இடம்!' என தோடுடைய செவியன் விடமுண்ட கண்டன் சபிக்க, காத்திருக்குது மனித குலம் ஆண்டு எண்ணூறு எப்போது வருமெண்டு! "எண்ணூறு வருவதெப்போ ஞெகிழி மக்குவதெப்போ! மாத்துங்கப்பா "விதியை"!' என கூக்குரலிடும் மனிதரை சிவனே என்று இருக்கச்செய்வது சிவனார்க்கும் இயலாது போல! தாவரங்களிலிருந்து ஞெகிழி செய்வோம் விதியை வெல்வோம் என இப்போதும் ஞெகிழி பிடித்து தொங்குது ஒரு பெருங்கூட்டம். மௌனமாய் புன்னகையோடு வேடிக்கை பார்த்திருக்குது தாவரக்கூட்டம். (PC: salon dot com website)

வெயில் விதைத்தவன் வெயில் அறுப்பான்!

 விதைத்தவன் வெயில் அறுப்பான்! திணை விதைத்தவன் திணையறுக்கையில் வினை விதைத்தவன் வினையறுக்கையில் வெயில் விதைத்தவன் வெயில் அறுத்துதானே ஆகவேண்டும்?! மரங்களாலும் செடிகொடிகளாலும் இயற்கை நெய்த கானகங்கள் படர்ந்த மலைச்சரிவுகளை மானபங்கங்கப்படுத்தி தேயிலை, காபி, சில்வர் ஓக் என வகுந்து வகுந்து வகுத்து, இடையிடையே முழுதாய் மழித்து எஸ்டேட் பங்களாக்களும் ஆலைகளும் குடியிருப்புகளும் கட்டி...விதைத்ததெல்லாம் வெயில், வெயில் தவிர வேறில்லை... கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் பயணித்தபோது, குன்னூருக்கு சற்றுமுன் வரை என்னைப்போர்த்தியிருந்த கானகத்தை காலம் சட்டென உருவி தேயிலைப்பாலையின் நிர்வாண தரிசனம்... ஆங்கிலேயருக்காக உருவப்பட்ட மலையரசியின் ஆடையை மறுபடி நெய்து போர்த்த சுதந்திர இந்தியாவில் தறிகளே இல்லையாம்! உலக மற்றும் உள்ளூர் பெருவணிக சந்தைகள் தரும் ஊக்கத்தில் நாமும் நம் அரசி என்ன அற்புதமான பச்சையாடை உடுத்தியிருக்கிறாள் என ஆமோதித்துக்கொண்டிருக்கும்வரை இங்கு அவளது ஆடைக்கான நூல் கூட ஆயத்தமாகாது! தொலைத்த கானகங்களை தொலைத்த இடத்திலேயே மீளுருவாக்கும் எளிதான செயலை புறம்தள்ளி வேறு எங்கெங்கோ காடுகளை ந

வீடற்றவனின் கூடு

  வீடற்றவனின் கூடு  அவன் சுமக்கும் நினைவுப்பொதி. நினைவுகள், ஊறிப்போன நைந்துபோன புளித்துப்போன நினைவுகள், இடையிடையில் இனிப்பு கெடாத சிதறல்களும் கண்டிப்பாய் இருக்கும்... இருபுறமும் விரையும் வாகனங்களில் கடக்கும் மனிதர்களைவிட இவன் அமைதியாகவே கடக்கிறான், நிதானமாய், கைகளால் சாலையை பிளந்து,  மெல்ல மெல்ல, இலக்கின்றி. நமக்குத்தான் சாலையென்பது விதிகளுக்கும் விதிமீறல்களுக்கும் இடையில் ஊடாடும் கருப்பு நதி.  அவனுக்கு அது எதுவாகவும் இருக்காது... காற்றைக்கிழித்து விரையும் பறவை போல அவன் காலத்தை கிழித்து மெல்ல நடைபோடும் ஒரு பயணி, சாலையும் காற்றும் அவனது உலகில் அவையவையாக இல்லாமலுமிருக்கலாம். வீடற்றவனின் கூடு அவனுக்கு சில நேரங்களில் தலைச்சுமை, சில நேரங்களில் தலைச்சுமையை தாங்கும் சுமை. விழிப்பு, உறக்கம், பசி, தூக்கம் இவை எதுவுமே அண்டாத ஒரு மோன வெளியில் அவன் இன்னும் கைகளை காற்றில் துழாவி நடந்துகொண்டிருக்கிறான். இந்தப்பயணத்தில் இவன் இப்போது ஞானத்திற்கு எவ்வளவு தொலைவில் இருக்கிறான் எவ்வளவு அருகிலிருக்கிறான் என்பது ஒரே ஒரு போதிமரத்திற்கு மட்டுமே தெரியும். அவனது அழுக்குப்பொதி இளைப்பாற அந்த மரத்தடி, இடத்தை ஆயத்த