ஆஜானுபாகுவான ஆள். பரம சாது. இருபது வருடங்களுக்கு மேலாக ஒரே பகுதியில் வசிக்கிறார். வேலை எதுவும் இல்லை அவருக்கு. வேலை தருவதற்கு யாரும் தயாரில்லை. பசித்தால் காலாற நடந்து, கிடைத்ததை உண்டு வாழ்கிறார். அடுத்த நாளுக்கு, அடுத்த வாரத்துக்கு என சேமிக்கும் பழக்கமெல்லாம் இவரது பரம்பரைக்கே கிடையாது. இவரது போக்கு சரியில்லை என ஒரு சாரார் இவரது நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்கத்தொடங்கியுள்ளார்கள். 'பைசா எதுவும் தராமலே சாப்பிட்டுவிட்டு செல்கிறார்' என்பது இவர் மீது சுற்றியுள்ள மக்கள் வைக்கும் தொடர் குற்றச்சாட்டு. அவர்களும்கூட 'மற்றபடி ஈ, எறும்புக்கு கூட இவர் துன்பம் தந்ததில்லை' என சர்டிபிகேட் தருகிறார்கள். ஒரு பன்னாட்டு தொண்டு நிறுவனம் தந்த தொழில்நுட்ப உதவியோடு இவரது நடமாட்டத்தை கண்காணிக்க சிலர் முடிவு செய்து இவரது கழுத்தில் கண்காணிப்பு பட்டை ஒன்றை பொருத்துவதற்கு அவருக்கு தெரியாமலே தீவிரமாக ஏற்பாடுகள் செய்துவருகின்றனர். பாகுபலி என்பது இவரது பெயர். விநாயகமும் சின்னத்தம்பியும் போலதான் இவர் என சிலரும், 'இல்லைங்க, இவரு வேற மாதிரி. தொந்தரவில்லாத ஆளு' என சிலரும் பேசிக்கொண்டே கண்காணிப்பு...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!