முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆகவே ஆகாது

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் மனம் மனம் அது கோவிலாகலாம் மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம் வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம் ... இதை விட்டு மலையில கடுகை தேடினால் காண்பதெல்லாம் கடுகாய் தெரியுதே, கண்ணு எரியுதே... காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் காணும் திசையெலாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்க களியாட்டம்... கொட்டடா ஜெய பேரிகை கொட்டடா! பாரதிக்கு இருந்த பார்வை, அனைத்துயிரையும் நேசித்த பார்வை. அன்றும் இன்றும் காக்கை குருவியிடம் அடையாள அட்டைகள் இல்லை. இன்றைய நம் மண்ணின் மைந்தர்க்கு சக மனிதர்கள் மீதான நம்பிக்கைக்கு ஏனோ குறிப்பிட்ட வண்ணங்கள் தேவை என்றானது... குறிப்பிட்ட அடையாளமுள்ளவருக்கு குடியுரிமை கிடையாது என்ற நிலைப்பாட்டைவிட அவர்கள் நம் மண்ணில் இத்தனை ஆண்டுகள் இருந்திருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பித்து குடியுரிமை பெறலாம் என்று மாற்றலாமே... அவர்களது வேற்று வண்ண ஆத்மார்த்த நட்புகளின் உத்தரவாதம் வேண்டுமென்றாலும் கேட்டுப்பெறலாமே? இந்தியாவிலிருந்து மேலை நாடுகளில் குடியுரிமை பெற்று

போந்தா கோலி

சுரேஷும் நானும் பக்கத்து பக்கத்து லைன் வீடு. பதின்பருவம். ஒரே வயது, வெவ்வேறு பள்ளிகள். கோலிக்குண்டு எங்களை நட்பாக்கியது, முட்டிக்கொள்ள வைத்தது, நட்பாக்கியது. வீட்டுக்கு வெளியே மண் தரை. மழை விழுந்து இறுகி மேலே மணல் படிந்து என கோலி குண்டு விளையாட சரியான பதத்தில். பள்ளி முடிந்த நேரங்களில், விடுமுறை தினங்களில் கால் டவுசர் பைகளில் கோலிக்குண்டுகள் சிணுங்க சிணுங்க விளையாடுவோம். பதினைந்தடி தூரத்தில் இடமிருந்து வலமாக ஒரு கோடு கிழிப்போம். கோட்டிலிருந்து இரண்டு அடிகள் மேலே தள்ளி ஒரு சிறு குழி எடுப்போம், சில கோலிகள் மட்டும் சிக்கும் அளவில். கோலி வீரர்கள் வரிசையாய் அணிவகுத்து ஆளுக்கு இத்தனை கோலி (ஒன்றிலிருந்து கைகொள்ளும்வரையிலான அளவில் பந்தயம் கட்டலாம், எல்லா வீரர்களும் ஒரே எண்ணிக்கையில் கட்டவேண்டும் ) என முடிவுசெய்து, சாட் பூட் த்ரீ போட்டு ஓபனிங் அண்ட் ப்ளேயிங் ஆர்டரை முடிவு செய்வோம். அந்த வீரரும் குறிப்பிட்ட இடத்திலிருந்து கோடு தாண்டி கோலிகளை வீசுவார். குழியில் விழுந்த கோலிகள் அவருக்கே சொந்தம். எஞ்சிய கோலிகளில் எதை அடிக்கவேண்டும் என வரிசையில் அடுத்து உள்ள

பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்

பாரத தேசமென்று... மிகப்பெரிய வணிகன், செல்வந்தன், ஒரு நாள் திடீரென அனைத்தையும் துறந்து வீட்டை விட்டே வெளியேறுகிறான், உறவின் பொன் சங்கிலிகளிலிருந்து விடுபட்டு. பிச்சை பெற்று உண் என உடல் வளர்த்து இறையோடு சேர ஏங்குகிறான். "கண்காணாமல் தொலைந்து போய் பிச்சை எடுத்தாலாவது நம் மானம் தப்பும். சொந்த ஊரிலேயே, நம் ஊரிலேயே, நம் வீட்டுக்கு வெளியே இப்போது பிச்சை கேட்டு நிற்கிறானே, மானக்கேடாய் இருக்கிறதே! செத்து ஒழிந்தால்தான் நிம்மதி" என நஞ்சில் தோய்த்து அப்பம் தருகிறாள் சகோதரி. நஞ்சு உண்ட இறை ஆட்கொண்ட ஆன்மாவல்லவா பிச்சை கேட்டு நிற்கிறது! நஞ்சுண்டன் அறியாத நஞ்சா? அப்பத்தை தூக்கி வீட்டு ஓட்டுக்கூரையில் தூக்கி எறிந்துவிட்டு பிச்சை சொன்னது இதுதான்; 'நஞ்சப்பம் நெஞ்சைச்சுடும், வீட்டப்பம் ஓட்டைச்சுடும்'. பற்றி எரிந்தது வீடு. இன்று பற்றி எரியுது நாடு. ஆன்மீகம் காற்றில் அலையும் தேசமிது. இதில் நஞ்சைத்தூவும் எதுவும் மிஞ்சாது. ஏனெனில் இது நஞ்சுண்டனின் தேசம். இந்த நெருப்பும் அணையும். நஞ்சுண்டனின் பூமியில் நஞ்சப்பம் தேவையில்லை என அநேகருக்கு மனதுக்கு எட்டியது