முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

எங்கே செல்லும் இந்தப்பாதை?

எங்கே செல்லும் இந்த பாதை, யாரோ யாரோ அறிவார்? அவனை துரத்தும் கனவு எது என்பது அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அவனுக்கு அப்போது இருபத்தைந்து வயது. அவனது நாட்டில் எதற்குமே மதிப்பில்லை (hyperinflation எனப்படும் அதீத பண மதிப்பு இழப்பு), இளைஞர்களுக்கு வேலையுமில்லை. அவன் ஒரு நல்ல படகோட்டி. அவனது நாட்டின் ஆறுகளிலும் கடலிலும் படகு பழகியவன். ஒரு நாள் அவனுக்கு ஒரு எண்ணம் உதிக்கிறது; 'அப்டியே படக ஓட்டிகிட்டு மூவாயிரம் கி.மீ போனம்னா சைப்ரஸ் நாட்டுக்கு போயிடலாம். அங்க தாமிர சுரங்கங்கள்ல வேலை செய்ய  நிறைய ஆட்கள் தேவையாம்'. ஆண்டு: 1932 நாடு: ஜெர்மனி 'யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க' என அந்த வயதுக்கே உரிய அசட்டு தைரியத்தோடு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்புகிறான். நீர்வழிப்பயணம் அவனுக்கு புதிதல்ல. ஆனால் நெடிய பயணம் அவன் பழகியதில்லை. ஆனாலும் துடுப்பு வலித்து பல பல நாட்கள், மாதங்கள் பயணிக்கிறான். முதலில் டான்யூப் நதி வழியே படகை செலுத்தி ருமானியா நாட்டை அடைந்து, அங்கிருந்து அதே நதி வழியே பயணித்து பல்கேரியா நாட்டை கடந்து டான்யூப் அவனை ஏஜியன் கடலில் சேர்க்க, அங்கிருந்து மத்திய தரைக்கட...

வசந்த்த முல்லை போலே வந்து...

கடந்த நாற்பதாண்டுகளில் நம்மைச்சுற்றி எவ்வளவோ மாற்றங்கள் மிக வேகமாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் மாறாது இருக்கும் சிலவற்றில் சினிமாவும் ஒன்று. திரைத்தொழில்நுட்பங்களும் வெகுவேகமாக மாறினாலும் சினிமா தரும் மேஜிகல் உணர்வு மட்டும் இன்னும்  அப்படியே மாறாதிருக்கிறது. சினிமா என்பது எத்தகைய ஒரு மகத்தான ஆயுதம் என Gen Z பசங்களுக்கு கார்த்திக் சுப்புராஜ் தந்த ஜிகர்தண்டா XX, என்னை வேறொரு நினைவுத்தளத்திற்கு இழுத்துச்சென்றது. வலிவலம் வலிவலம் என்றொரு சிற்றூர். அந்த ஊரில் 1980களில் ஒரே ஒரு டெண்ட் கொட்டாய். அதில் மொக்கை படங்கள் ஓடிக்கொண்டிருக்கையில் பக்கத்து சிற்றூர் ஒன்றில் நல்ல படம் ஏதாவது ஓடினால் சைக்கிளிலோ அல்லது நடந்து சென்றோ படம் பார்க்கும் கூட்டம் நிறைந்த சமூகம் அது. எனது தாய்மாமா ஒருவரின் சைக்கிளின் பின்னிருக்கையில் ஒரு பௌர்ணமி இரவில் நான் அமர்ந்திருக்க, பகல் முழுதும் வேளாண் சார்ந்த பல அலுவல்களை முடித்து களைத்திருந்தாலும் சிவாஜி படம் பார்க்கும் ஆர்வம் அவரை உந்த, துணைக்கு அரை டவுசர் போட்ட என்னை டபுள்ஸ் மிதித்து ஐந்து கிலோ மீட்டர் நீளும் விளக்கு வெளிச்சமற்ற அந்த குறுகிய சாலையில் பயணித்து...

விதைப்போக்கன்

மழை பெய்துகொண்டிருந்த ஒரு முன்னிரவு வேளையில் உறவினர் ஒருவர் சில முறை தொடர்பு கொள்ள முயன்றதை தொலைபேசி காட்டியது. அழைத்தேன். சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு, 'பாபு, உங்களோட ஒருத்தர் பேசணும்னு கேட்டுகிட்டே இருக்காரு. கான்ஃபரன்ஸ் காலில் அவரையும் அழைக்கட்டுமா?' என்றார். யார் என வினவினேன்.  'சொந்தகாரப்பையன்தான். சின்ன வயசில எங்களோட கல்யாணத்தில உங்க அறிமுகம் கெடைச்சதாம். பல வருசம் கழிச்சி இப்போ லீவுல ஊருக்கு வந்திருக்கார். வந்து என்னை பாத்ததில் இருந்து உங்களோட பேசணும்னு சொல்லிகிட்டே இருக்கார். இதோ இப்ப அவரை லைன்ல கூப்டுறேன்' என்றார். 'அத்தான்! எப்டி இருக்கீங்க அத்தான்!' என ஒரு குரல்! நானே மெய்யழகன் படம் பார்த்தபின்பு இன்றுவரை என் தஞ்சாவூரில் இருக்கும் சில மெய்யழகன்கள் நினைவுக்கு வந்து சில மாதங்களாய் அதன் தாக்கத்தில் சுற்றிக்கொண்டிருக்கும்போது இது யாரு இன்னொருத்தர்! என்கிற எண்ணம் மனதிலாட, பேசினேன். 'நான் குமார் பேசறேன்த்தான்! அண்ணன் கல்யாணத்திலதான் ஒங்கள பாத்தேன்... பாத்தோம். அப்போ நாங்கள்லாம் சின்ன பசங்க. லக்‌ஷ்மாங்குடி கிராமத்திலேந்து சென்னைக்கு கல்யாணத்து...

சுவடுகள், பாதைகள், பயணங்கள்

இன்றுவரை நிறைவேறா பெருங்கனவு. சிறு வயதில் நினைவு தெரியத்தொடங்கிய நாட்களில் இருந்து கல்லூரி முடிக்கும் வரை நாங்கள் வாழ்ந்த இல்லங்களில் (நேர்மையான அரசு ஊழியர்கள் தொடர் பணி மாற்ற தண்டனை பெற்று பல வீடுகளில் வசிக்க வேண்டிய நிர்பந்தம். அதில் எதுவும் சொந்த வீடு இல்லை!) ஒரு சில ஒளிப்படங்கள் மட்டுமே எங்களது வீட்டுச்சுவர்களில் நிரந்தரமாய் தங்கியிருந்தன. எங்களது குடும்ப ஒளிப்படம் ஒன்று, அண்ணாவும் அக்காவும் நேர்த்தியான சிறார் உடைகளில் படியப்படிய தலைவாறி அமர்ந்திருக்கும் ஒளிப்படம் ஒன்று. இவை இரண்டின் நடுவில் அளவில் பெரிதான படம் ஒன்று; கோலூன்றி நடக்கும் ஒரு தாத்தா. அவ்வயதில் எங்கள் வீடுகளுக்கு வந்து போகும் உறவுக்கார தாத்தாக்கள் எவர் போலவும் இல்லாது தனித்தன்மையான முகம். அந்தப்படத்தின் அடிப்பகுதியில் அவரது கைத்தடியின் இருபுறமும் ஒட்டப்பட்டிருந்த எங்கள் படங்கள். அப்பாவுக்கு ஒரு கனவு இருந்தது. கனவின் பின் ஒரு லட்சியம் இருந்தது. அந்த லட்சியத்தை தந்தவரது படம்தான் அது என்பதை நான் என் பதின்ம வயதில்தான் உணர்ந்தேன். அதுவரையில் அவரை மகாத்மா, தேசப்பிதா என என் வயதுக்கு புரியாத அடைமொழிகளில் மட்டுமே உலகம் எனக்கு அ...

ஒரு சொல் என்ன, ஒரு எழுத்தே போதும்!

ஆயுத பூஜையும் உலக அமைதியும். நாமாவது வருடத்திற்கொரு முறைதான் ஆயுத பூஜை கொண்டாடுகிறோம். ஆயுதங்களை உற்பத்தி செய்யும் சில நாடுகள் என்னவோ தினம் தினம் ஆயுத பூஜை கொண்டாடுகின்றனர். பாரதப்போரில் குருஷேத்திர போருக்கு முன்னால் இதே நவமி தினத்தில் தன் மக்கள் வெல்லவேண்டும் என காளியிடம் கோரிக்கை வைத்து தன்னைத்தானே மாய்த்துக்கொண்டான் அருச்சுண குமாரன் அரவான். அன்றைய இரவில் அவனது அன்னை பூமியான நாகலோகம் எங்கும் கண்ணீர்த்திவலைகள். இன்றைய நம் உலகில் போர்களை துவக்க தன்னைத்தானே யாரும் மாய்த்துக்கொள்வதில்லை. மாறாக, வேறு யாரையாவது பெரிய அளவில் மாய்த்தே பூஜையை துவக்குகின்றனர். பூலோகமெங்கும் கண்ணீர்த்திவலைகள் நிரம்பினாலும் இவர்களது ஆயுத 'பூஜை' நிற்காது நடக்கும். போர் நடந்தால்தான் ஆயுதங்கள் வெகுவாக விற்பனையாகும். ஆயுதங்கள் தகர்த்தெரிந்த பல்லாயிர கட்டிடங்களை மறுபடி அவர்களே கட்டித்தர, போர் நின்றாகவேண்டும், அமைதி நிலவ வேண்டும். எனவே போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஆயுதங்கள் கொண்டே இவர்களே எழுதுகின்றனர். பின்பு அதே ஆயுதங்களால் 'உலக அமைதி'க்கான விருது விண்ணப்பங்களையும் எழுதுகின்றனர். ஏகே 47 என்கிற பழுதற்...

களவாடிய பொழுதுகள்

தமிழ்நாடு விவசாய கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேறுகையில் காற்றில் மிதந்து காதை வருடியது இளையராஜாவின் இசையில் அற்புதமான பாடலொன்று. ஒரு போட்டிக்கான ஒத்திகை என்பதை இசை தப்பி அதிர்ந்த கருவிகளும், முதல் ஹம்மிங்கை நிறுத்தி நிறுத்தி திரும்பப்பாடிய பாடகியின் தேன் குரலும். நாங்கள் செய்யப்போன திகிலான வேலையொன்று எங்களை நின்று ரசிக்க விடாமல் வெளியே தள்ளிச்சென்றது. யாரந்த நாங்கள்?  என்னதான் அந்த திகிலான வேலை? கோவை. 1990களில் ஒரு பழம்பெருமை வாய்ந்த பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு மாணவர்கள் நாங்கள். வகுப்புகள் தொடங்கிய சில நாட்களில் இருந்தே எங்கள் கல்லூரி விடுதி அறைகளில் எங்களுக்கு சொந்தமான பொருட்கள் காணாமல் போனவண்ணம் இருந்தன. எனது பாக்கெட் ரேடியோ, அறை நண்பனின் கைக்கடிகாரம், இன்னொரு அறைத்தோழனின் இஸ்திரிப்பெட்டி என வகை வகையான பொருட்கள். விடுதி காவலரிடமும், விடுதி கண்காணிப்பாளரிடமும் முறையிட்டும் களவு தொடர்ந்தது. இரவின் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு நண்பர்கள் கண் விழித்து பல நாட்கள் கண்காணித்து கண்டுபிடித்தது ஒரு திடுக்கிடும் உண்மை; விடுதி மாணவர்களில் இருவர்தான் 'நாயகர்கள்'. அவர்களுக்கு இறுதி...

அறம் - 1

எனது பெருநகரின் ஒரு உலகப்புகழ் உணவகம். ஆயிரக்கணக்கானோர் தினமும் உண்ணும் இடம். பல கல்லூரிகள், மருத்துவமனைகள் சூழ்ந்த, பரபரப்பான தேசிய நெடுஞ்சாலையில் 'கண்டிப்பா வெயிட் பண்ணியாவது சாப்பிடுவோம்!' என ஒருமணிநேரம் காத்திருந்து உண்ணும் ரசிகர்களை வாடிக்கையாளர்களாக கொண்ட உணவகம். பின் மாலைப்பொழுது ஒன்றில் 'ஒரே நபர்' என்பதால் உடனே இருக்கை கிடைத்து...எளிதான நம் மண்ணின் உணவுகளை விரும்பிக்கேட்டு உண்டுகொண்டிருந்தேன். எனக்கு கரிசனமாய் உணவு பரிமாறிய சிறு வயது பெண், அருகில் எங்கோ பார்த்துவிட்டு ஒரு பதைபதைப்போடு தன் மேற்பார்வையாளரிடம் ஓடினார். அவ்வளவு பேர் உணவு அருந்தும் களேபரமான இடத்தில் ஏராளமான பரிமாறிகள் பல தட்டுகளை கரங்களில் ஏந்தி பல மேசைகளை நோக்கி நகரும் Brownian Movement கணத்தில் ஒரு பெண், ஒழுங்கின்றி அசையும் அத்தனை மனித துகள்கள் இடையிலும் எவர் மீதும் மோதக்கூடாதெனும் கவனத்தில் ஒடியது என் கவனத்தை ஈர்த்தது. அதன்பிறகு சில நிமிடங்கள் வேகமாக கைகளை அசைத்து, தலையை அசைத்து, பின் கைகளை பிசைந்தபடி வேறொரு மேசையை நோக்கி சாடையில் ஏதோ சொல்ல, அவரது மேற்பார்வையாளரின் கண்களில் கோபம் பரவியது. எனது அடு...