எங்கே செல்லும் இந்த பாதை, யாரோ யாரோ அறிவார்? அவனை துரத்தும் கனவு எது என்பது அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அவனுக்கு அப்போது இருபத்தைந்து வயது. அவனது நாட்டில் எதற்குமே மதிப்பில்லை (hyperinflation எனப்படும் அதீத பண மதிப்பு இழப்பு), இளைஞர்களுக்கு வேலையுமில்லை. அவன் ஒரு நல்ல படகோட்டி. அவனது நாட்டின் ஆறுகளிலும் கடலிலும் படகு பழகியவன். ஒரு நாள் அவனுக்கு ஒரு எண்ணம் உதிக்கிறது; 'அப்டியே படக ஓட்டிகிட்டு மூவாயிரம் கி.மீ போனம்னா சைப்ரஸ் நாட்டுக்கு போயிடலாம். அங்க தாமிர சுரங்கங்கள்ல வேலை செய்ய நிறைய ஆட்கள் தேவையாம்'. ஆண்டு: 1932 நாடு: ஜெர்மனி 'யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க' என அந்த வயதுக்கே உரிய அசட்டு தைரியத்தோடு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்புகிறான். நீர்வழிப்பயணம் அவனுக்கு புதிதல்ல. ஆனால் நெடிய பயணம் அவன் பழகியதில்லை. ஆனாலும் துடுப்பு வலித்து பல பல நாட்கள், மாதங்கள் பயணிக்கிறான். முதலில் டான்யூப் நதி வழியே படகை செலுத்தி ருமானியா நாட்டை அடைந்து, அங்கிருந்து அதே நதி வழியே பயணித்து பல்கேரியா நாட்டை கடந்து டான்யூப் அவனை ஏஜியன் கடலில் சேர்க்க, அங்கிருந்து மத்திய தரைக்கட...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!