முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

குளிர் இரவின் வெம்மை...

நினைவுக்குமிழ்கள்... நிஜ நீர்க்குமிழ்கள் போலவே... அடிமட்டத்திலிருந்து எப்போதாவது குபுக்கென மேலெழுந்து எங்காவது வெளிப்படும். அதுவாய் மெல்லக்கரைந்து உடையும், இன்னொன்று முளைக்கும்... இந்த இரவில் சற்று நேரம் முன் பாலு ஒரு இசை மேடையில் ஓ ப்ரியா ப்ரியா மீ ப்ரியா ப்ரியா  என தெலுங்கில் உருக, பாடகி ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா எனத்தொடர, இருமொழிப்பாடல்... இசையின் மென்சிறகுகளை இறுகப்பற்றி, பாடல் முடிந்தபின்னும் இறங்க மனமின்றி மனம் தளும்ப, அந்த தளும்பளில் இருந்து உருளத்தொடங்கின என் குமிழ்கள் ஒவ்வொன்றாய்... குன்னூரில் நாயகனின் குளிர் வீட்டுக்கதவு திறக்கையில் கீழ் இடைவெளியில் கசிந்து உள் பரவும் பனி... ஓ பாப்பா லாலி என காதலியை தொடையில் தாங்கி தாலாட்டுப்பாடும் மனோ... மலை மார்க்கெட்டில் கையில் கேரட் கொத்தோடு பாட்டியின் பார்வையிலிருந்து நழுவியோடும் நாயகி... இறுதியாண்டு மருத்துவ மாணவியின் முகத்தில் பொட்டு வைத்த வட்ட நிலவாய் அரையிருளில் ஓடும் காதல் கலந்த ரசனை... நரைமுடியில் கோர்த்த மணிகளை பெருங்காதலோடு தடவும் வாத்துக்காரியின் விரல்கள்... நிலவொளியில் கடற்கரையில் கிளிஞ்சல்களில் உலையரிசி... வயல்வெளியில்

இதுதான்டா வாழ்க்கை!

  இதுவல்லவா வாழ்வு! கண்களை மூடி கற்பனை செய்து பாருங்கள்; மெல்ல தாலாட்டும் நதியில் சில படகு வீடுகள், பத்து இருபது மனிதர்கள், நினைத்தபோது நதியில் பயணித்து இரவில் / பகலில் மீன் பிடித்து என வாழ்வு. நதிக்கரையில் இந்த மனிதர்களை தேடி வந்து மீன் வாங்கும் மக்கள் கூட்டம், படகு வீடுகளின் குழந்தைகள் படிக்க அருகில் சிற்றூரில் பள்ளிக்கூடம்...  நதிப்படகே வாழ்விடம்! இருபது வருடங்களாக இப்படி ஒரு மேலான வாழ்வை நம் நாட்டில் சிலர் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்! சமீபத்தில் அரசு இவர்களுக்கு ரேஷன் அட்டைகளும் தந்து கௌரவப்படுத்தியுள்ளது!! ஆந்திரா, ஒரிசா, சட்டீஷ்கர் மாநிலங்களின் எல்லைகள் சந்திக்கும் நிலப்பரப்பில் மூன்று மாநிலங்களையும் நனைத்துச்செல்லும் சபரி நதியில் இவர்கள் வாழ்கின்றார்கள்.  (சபரி, கோதாவரியின் கிளை நதி) உழைப்பால் இவர்கள் மீனவர்கள்.  'நமக்கெதற்கு நிலத்தில் வீடு?' என இவர்களில் மூத்தவர், குடம் வெங்கடேஸ்வர்லு, ஒரு நாள் சிந்தித்ததன் விளைவு இது. ஆண்களும் பெண்களும் தேவைக்கு மீன் பிடித்து விற்று, இவர்களது குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்கல்வி கற்று... இப்போது அடுத்த தலைமுறையில் ஒரு திருமணமும் நிகழ்ந்திரு

இறை கனவு, பலிக்கட்டும்!

எண்ணமெல்லாம் வண்ணம் பல வண்ணம் நம் இயல்பிலேனோ பல வர்ணம். வர்ணங்கள் வண்ணங்களல்ல நிறங்களே வண்ணங்கள்! வர்ணபேத வாழ்வில் வண்ணங்களற்ற பொழுதுகளை எண்ணங்கள் கொண்டு நித்தம் கடப்போரை ரசம் மாறாது ரசிக்குது சாலைப்பூக்கள். கல்சாலை மண்சாலை நகரசாலை கிராமசாலை பெருநகர வீட்டின் சுற்றுச்சுவருள் ஒடுங்கி கோடிட்ட இடங்களில் பரவி நிற்கும் அலங்கார சாலை என சாலைகளிலும் வர்ணம் பல வர்ணம். இவையெங்கிலும் சளைக்காது வண்ணங்கள் மட்டுமே  சுமந்த கிண்ணங்களாய் நிற்குது மலர்க்கூட்டம், வண்ணங்களே கிண்ணங்களாய்... இந்த வண்ணங்களை அள்ளிப்பூச தெளித்துக்கொள்ள வழியில்லை எனினும் பார்த்து ரசிக்கலாம் வர்ணங்களை உதறி. சாலைகள் அற்ற வர்ணங்கள் அற்ற ஏன்? மனிதர்களற்ற சிறு பரப்பிலும் பூத்து நிற்கும் இந்த வண்ணக்குடுவைகள் யாரும் பார்க்காமலே! வானவில்லுக்கும் வண்ணங்கள் இங்கிருந்தே கிடைக்கிறதாம்! இறைவன் ஒருநாள் உலகை காண மலராய் வந்தாராம் கண்ணில் பட்ட மலர்களை எல்லாம் 'நலமா?' என்றாராம். "எங்கள் நலமும் எங்கள் வாழ்வும் மங்காத வண்ணங்களென சங்கே முழங்கு" என முழங்கி தலைவணங்கிய மலர்கள் கூட்டம் கூட்டமாய் இறையிடம் சொன்னது என்ன தெரியுமா? "ஐய