லோகா - பகுதி 1 - சந்த்ரா - திரைப்பார்வை ஒரு வழியாக OTT யில் வெளியானபின்புதான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கல்யாணி ப்ரியதர்ஷன் தூக்கி சுமந்திருக்கும் பளு பெரியது. முழு அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார். கதையின் களமும் அது உருவாக்கப்பட்ட விதமும் வாவ்! சொல்லவைக்கின்றன. சூப்பர் ஹீரோ படங்கள் ஹாலிவுட்டில் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையை மாற்றி, நம் மண்ணில் இன்றும் வாழும், பயமுறுத்தும் கதைகளையும் அவற்றின் கதை மாந்தர்களையும் அவர்களது கதைகளின் நீட்சியையும் நமது நவீன உலகத்துடன் பொருத்தி இப்படி ஒரு மெகா ஹிட்டு தர மலையாள சினிமாக்களால் மட்டுமே முடியும்! மின்னல் முரளி ஒரு முன்னோட்டமென்றால் இந்த லோகா உலகம் ஒரு தேரோட்டமாய்! மண்ணோடு பிணைந்த கதைகள், தொழில் நுட்ப உத்தி, திரையாக்கம், நடிப்பு, இசை என அனைத்திலுமே வேற லெவல் என்று மனதார வாழ்த்தி ரசித்து மகிழலாம் :-) ஆனால் எனக்கு ஒரே ஒரு குறை மட்டுமே: 2014 இல் வெளியான SPRING என்கிற திரைப்படத்தின் கருவை முழுதாக தழுவி லோகா பட சந்த்ராவை உருவாக்கி இருக்கிறோம் என Acknowledgement Card போட்டிருந்தால் கூட மகிழ்ந்திருப்பேன். அக்கட பூமியில் இப்படி காப்பியடித்து ...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!