நண்பகல் கோடை வெயிலில் சாலையை கடக்கும்போது அவர்களை பார்த்தேன். ஒரு டாடா ஏஸ் வண்டி முழுக்க குப்பைகள். கணவன், மனைவி + ஒரு சின்னஞ்சிறுமி. சாலையோர மர நிழலில் வண்டியை நிறுத்திவிட்டு தரையில் அமர்ந்து அவர் எதையோ உடைத்து சேகரிக்க, அந்த சிறுமியும் குப்பைகளை கிளறிக்கொண்டிருந்தாள்; மூன்று வயது கூட ஆகியிருக்காது... அவளது அம்மா சாலையோரம் இருந்த குப்பையை கிளறிக்கொண்டிருந்தார். யு டர்ன் செய்து திரும்ப வந்து அவர்கள் அருகில் நிறுத்தி உரையாடினேன்... 'ஏங்க இப்படி சின்ன குழந்தையும் குப்பையில...பள்ளிக்கூடம் போகலையா?' என்றேன். திருப்பூரில் இருந்து தினமும் கோவைக்கு வந்து குப்பைகள் பொறுக்கி அவற்றில் விலை பெறக்கூடிய பொருட்களை பிரித்தெடுத்து விற்று பிழைப்பு நடத்துகிறார்கள். தமிழ் முகங்களாக தோன்றவில்லை ஆனாலும் தமிழ் தடங்கலின்றி பேசுகிறார்கள். வீட்டில் அவரது அம்மா அப்பா இருந்தாலும் அவர்களும் தினக்கூலிகளாக வெளியே செல்வதால் குழந்தையை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள யாருமின்றி அவர்களுடனே அழைத்துச்செல்வார்களாம். பள்ளி செல்லும் வயது வந்தவுடன் பள்ளிக்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறார்களாம். கண்ணியமான குரலில் பேசியவரை ப...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!