வலிவலத்தில் அம்மா பாட்டி வீட்டில் கோடை விடுமுறையில் அடுப்பறையில் விறகடுப்பில் பாட்டியோ சித்திகளோ தேநீர் கொதிக்கவைக்கையில் அடுப்பின் தீக்கங்குகளுக்கு மத்தியில் புளியங்கொட்டைகளை வேகவைப்போம். கங்குகள் அணையாதிருக்க மூச்சிழுத்து ஊதுகுழலில் கங்கு நோக்கி ஊதிக்கொண்டே கொதிக்கும் நாட்டு மாட்டுப்பாலில் சுத்தமான தேயிலைத்தூளை இட்டு இனிப்புக்கு வெல்லம் சேர்த்து தேநீர் தயாராகும் நேரத்தில் புளியங்கொட்டைகள் வெந்துவிடும். அவற்றை மென்றுகொண்டே மிடறு மிடறாய் தேநீர் அருந்துகையில் அவை நாசியில் ஏற்றிய நறுமணம் என் உள் ஆழத்தில் தண்ணென குளிர்ந்த கூழாங்கல்லாய் என்றும் சுமப்பேன். அப்பா பாட்டியின் அடுப்பறை எங்களுக்கு (பசங்களுக்கு) தடை செய்யப்பட்ட பகுதி். வாசல் திண்ணை அல்லது கொல்லைப்புற கிணற்றடி மட்டுமே எங்கள் தாத்தா 'அனுமதித்த' பகுதிகள். அப்பா பாட்டி அமைதியின் மொத்த உருவமாய் மெலிதாய் சிரித்துக்கொண்டே சித்தியின் உதவியோடு அனைவருக்கும் காய்ந்த சாண வரட்டிகளையும் விறகுகளையும் எரிபொருளாக்கி உணவு சமைப்பார். ஒரு முறை நாங்கள் கிணற்றடி கொல்லைப்புற மண்ணில் கல்லடுப்பு செய்து, தென்னை மட்டைகள் கொண்டு தீ மூட்டி, சீவிய ...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!