முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரவி என்னும் காடன்...

தமிழக கேரள காடுகளில் மட்டும் 40க்கும் மேலான தொல்குடி இனங்கள் வாழ்கின்றன. அடர் வனங்களுள் இருக்கும் இவர்களது பெரும்பான்மையான குடியிருப்புகளுக்கு நவீன சாலை வசதிகள் கூட கிடையாது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நம் வனங்களை காத்து வருபவர்கள் இவர்கள். நம் நாடு விடுதலை பெற்ற பின்பும் இவர்களது பணி தொடர்ந்து வருகிறது. வேட்டையாடி இனங்களாய் வாழும் இவர்களை நம் நாகரிக உலகம் மெல்ல தொடர்பு கொண்டு, 'காட்டிலிருந்து நாங்கள் கேட்பவற்றை கொண்டு வா, பண்டமாற்றாய் உனக்கு வேண்டிய நாகரிக பொருட்களை நாங்கள் தருகிறோம்' என மெல்ல பழக்கி, தேன், மூலிகைகள் என தொடங்கி விலை உயர்ந்த மரங்கள் வரை இவர்களைக்கொண்டே நம் காடுகளிலிருந்து சமவெளிக்கு இறக்குமதி செய்கின்றன. இத்தனை தொல்குடி இனங்கள் வாழும் காடுகளில் விலங்குகளால் கொல்லப்பட்டவர்கள் என யாருமில்லை என்பதே சில பத்தாண்டுகளுக்கு முன் வரை நிலவிய உண்மை. சமவெளி நுகர்வோரின் தூண்டுதலால் தொல்குடியினருக்கு தேவையில்லாத அல்லது தேவைக்கு அதிகமான காட்டு விளைச்சலை எடுக்கச்சென்ற தொல்குடியினர் எப்போதாவது விலங்குகளால் தாக்கப்படுவது நிகழும், குறிப்பாக தேனெடுக்கையில். ஆனாலும் உயிர்ச்சேதம் அரிதாக...

அனுமாரும் சகாராவும்!

சம்பந்தமே இல்லாத ரெண்டு விசயத்தை இணைச்சி பேசினா, 'மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதே'ம்பாங்க நம்மூர்ல. ஆனா நாம வாழ்ற பூமி என்னடான்னா இதப்போல பலப்பல முடிச்சுகளாலதான் இன்னமும் சுத்திகிட்டிருக்காம். வாங்க, இதில் ஒரு முடிச்ச கொஞ்சம் டீடெயிலா பாப்போம். ஆப்பிரிக்க கண்டத்தோட வடக்குப்பகுதில சகாரா சகாரான்னு ஒரு பாலைவனம் இருக்கு. உலக பாலைவனங்கள்லயே ரொம்ப பெரிசு இந்த பாலைவனம்தான். பல ஆயிரம் வருசம் முன்னாடி ஒரு பெரிரிரிரிய ஏரியாக இருந்த நிலப்பரப்பு, பருவ மாற்றங்களால வத்திப்போயி பாலைவனமாச்சாம். இந்த பாலைவனத்தின் காலடியில், அதாவது தென் எல்லையில், கிழக்கு மேக்கா ஒரு மிகப்பெரிய புல்வெளி நிலப்பரப்பு இருக்குதுங்க. சகேல் என அறியப்படும் இந்தப்புல்வெளிதான் சகாராவ தெக்கால வளரவிடாம தடுத்துகிட்டு இருக்குது. இந்த சகேல் புல்வெளிதான் வடக்கு ஆப்பிரிக்காவையும் தெக்கு ஆப்பிரிக்காவையும் பிரிச்சு தெக்க காப்பாத்துற குலசாமி. இந்த சகேல் நிலப்பரப்புல ஒன்பது நாடுகள் இருக்கு. எல்லாமே மேய்ச்சல் வாழ்வியல் சார்ந்த நாடுகள். 1970-80கள்ல சகேல் + சகேலுக்கு தெக்கேந்து மக்கள் இன்னும் கொஞ்சம் பெரிசா இடம் வேணும்...