நம் பூமியிலே ஆதியில் நிலம் கீறி எச்சமிட்டு பறவைகள் வளர்த்த பரப்பெங்கும் பச்சையாச்சி. பச்சை கண்டு படையெடுத்த பல்லுயிர்க்கூட்டம் இச்சையோடு புசித்து எச்சமிட்டு எச்சமிட்டு பச்சை பரவியாச்சி. புலன்குளிர்ந்து ஆகாயமும் ஆனந்தமாய் கண்ணீர் வடிக்க துளிபட்ட இடமெங்கும் தீயாய் தாவித்தாவி பச்சை பரவ காணுமிடமெலாம் பச்சையாச்சி. பல்லுயிரும் பச்சையோடு பல்கிப்பரவ ஓருயிர் மட்டும் மாற்றி சிந்தித்து ஓரிடத்தில் தங்கிப்போச்சி. குந்தித்தின்று கரைந்த பச்சை, அவ்வுயிரை காணாப்பச்சை தேடத்தள்ள, காணும் ஆவலி்ல் இவ்வுயிர்க்கூட்டம் பறவைபோல நிலம் கிளறி எச்சமிட மொத்தமும் மறுபடி பச்சையாச்சி. விலகிப்போன உயிரெலாம் பசிக்கு மட்டும் புசிக்கையிலே தங்கிப்போன கூட்டம் மட்டும் ருசிக்கும் சேர்த்து புசிக்கவும் பழகியாச்சி. மழையற்ற காலத்திலே பசியென்ன உறங்கிடுமா என அக்காலத்துக்கும், எக்காலத்துக்கும் சேர்த்து வைக்க இந்தக்கூட்டம் பல்லுயிரழித்து பயிர் வளர்க்க, நொந்த வானம் அழுத கண்ணீர் பூமி சேருமுன்னரே கடும் வெயிலில் ஆவியாச்சி. ஆவியோடு சேர்ந்து மிச்சமிருந்த பச்சையும் (நீரின்றி) அவிந்துபோச்சி. சோர்வடையா உழைப்போடு இந்தக்கூட்டம் மறுபடி மாற்றி சிந்...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!