நேற்று தோட்டத்திலிருந்து கொடுக்காப்புளி பழங்கள் பறித்து வந்திருந்தேன். அப்பாவுக்கு எண்பது+ அம்மாவும் 80ஐ தொட்டுவிடும் தூரத்தில். பழங்களை பகிர்ந்து உண்டோம். அதன் பின், 'எப்படி இருந்தது சுவை?' என்றேன். அவர்களது விடை நான் சற்றும் எதிர்பாரதது... 'பள்ளிக்கூடம் போம்போது மத்யான சாப்பாடு டப்பாவ காலி பண்ணிட்டு மதிய உணவு இடைவேளயில வேட்டைக்கு போவோம். அப்பல்லாம் பையில அரையணா இருந்தாலே பெரிசு... கொடுக்காப்புளி, நெல்லிக்கா, மாங்கா, பாலாப்பழம், வெள்ளரிப்பத்தை, எலந்தை, எலந்த வடை எல்லாம் பள்ளிக்கூட வாசல்லயே கிடைக்கும். பெரும்பாலும் வயசான பெண்கள்தான் கூறு கட்டி வச்சிட்டு உக்காந்திருப்பாங்க. வாங்கி தின்னுட்டு வாய்க்கா பக்கம் போனா அங்கே ஈச்சம்பழம் காச்சிரிக்கும். இப்ப கிடைக்கிற பேரிச்சை இல்ல அது. குத்துச்செடி மாதிரி இருக்கும். அதில் ஆரஞ்சு இல்லன்னா சிவப்பு வண்ணத்தில ஈச்சம்பழம் இருக்கும். பேரிச்சைல பாதிக்கும் பாதிதான் அதோட அளவு. அப்புறம் பாலாப்பழம் விப்பாங்க. சின்னதா வெள்ளை நிறத்தில சதையும் வெள்ளையாவே இருக்கும். அத சாப்பிடுவோம். ஒவ்வொரு சீசனுக்கு வகை வகையா பழங்க. வேப்பம்பழம் கூட தின்னுருக்கோம...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!