முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஓயாத தேடல்...

நுங்கம்பாக்கம் ராஜ் பவனாவில் அதிகாலை அடுப்பில் பொங்கல் வெந்து இறங்கியவுடன் வடையுடன் முதல் ப்ளேட் எனக்குதான்.  கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தினமும் காலையில் ஆறு மணிக்கு என்னை பார்த்ததும் ரெகுலர் சர்வர் ஒரு புன்சிரிப்பு ப்ளஸ் தலையசைப்புடன் உள்ளே சென்று ஆவி பறக்க கொண்டு வருவார். முடித்தபின் காபி.  அடையாறில் ஐந்தரைக்கு ஆட்டோ பிடித்து இங்கு வந்து சிரம பரிகாரம் ஆன பின் மாக்ஸ் முல்லர் பவனம். ஜெர்மன் மொழி கற்கும் ஆவலில் ஆஃபீசுக்கே தெரியாம சேர்ந்து, தினமும் காலையில் வேலைக்கு எப்படியும் அரைமணி தாமதமாய் வந்து, டிசிஎஸ் ஆஃபீசில் (185, டி.கே.சண்முகம் சாலை) நெருப்பு கக்கும் ப்ராஜக்ட் மேனேஜரின் கண்களில் ஒரு நாள் சிக்க, 'வாட் நான்சென்ஸ் ஈஸ் திஸ்? யு நோ த இம்ப்பார்ட்டன்ஸ் ஆஃப் அவர் ப்ராஜக்ட் டு திஸ் ஆர்கனைசேஷன்? அதுவும் இப்பதான் ப்ராஜக்ட்ல சேந்திருக்க!' என அடித்தொண்டையில் எனக்கு மட்டும் பீதியைக்கிளப்பும் குரலில் மெல்ல கேட்டார்.  நியாயமான கேள்விதான். 750 Man Years தேவைப்படும் Show Piece Global Software Project ஐ கச்சிதமாய் செதுக்கிக்கொண்டிருப்பவர், கேட்பார்தானே! 'சாரி சார். ஆக்சுவலி சார், அவர் க்

காதலர் தினமாமே!

February 14: Happy Lupercalia! வெகுகாலத்துக்கு முன்பு ரோமாபுரியில் பிப்ரவரி 7 என்பது வசந்த காலத்தின் தொடக்க தினம். மேற்கத்திக்காற்று மழைமேகங்களை ரோமாபுரியின் நிலங்கள் மீது திசை திருப்பும் நாளாக இது கணிக்கப்பட்டிருக்கிறது. நிலங்களை சீர்திருத்துதல், பயிர்களில் களையெடுத்தல், கவாத்து செய்தல், பழைய தாவரக்கழிவுகளை எரியூட்டுதல் (அதிலிருந்து கிடைக்கும் சாம்பல் மீண்டும் விளை நிலங்களுக்கு உரமாகும்) போன்ற வேலைகளை அன்றைய விவசாயிகள் தொடங்கி, அந்த மாதம் 15 ஆம் நாள் ஒரு மிகப்பெரிய 'கிடா வெட்டு, சாமி கும்பிடு' விழா நடத்தி, வெட்டிய கிடாக்களின் தோலை உரித்து அந்த தோலினால் எதிர்வரும் பெண்களை வலிக்காது அடித்து (அப்படி அடி வாங்கியவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டுமாம், நிறைய குழந்தைகள் பிறக்குமாம். ஐதீகம்) ஆனந்தமாய் கழியும் அந்த நாள். ரோமப்பேரரசின் முதல் அரச சகோதரர்களை உயிர்காத்து வளர்த்த ஓநாய் ஒன்றை கடவுளாய் வழிபட்டு அதன் குகையில் தொடங்கும் இந்த விழா. கிரிஸ்தவ மதம் ரோமப்பேரரசுக்கு எதிராக மெல்ல மெல்ல காலூன்றி, உயிர்த்தியாகங்கள் செய்து பின்னர் ஒரு ரோமப்பேரரசனே கிறிஸ்தவ மதத்துக்கு மாறியபின் தழைத்தோங்கி..