முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சகியே!

 கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் இடையில் விழித்திருக்கும் நொடியிலெல்லாம் துரத்துது என்னை, என் பதின்பருவ கனவு ஒன்று. பாலகுமாரன் போதித்த காதல் வேதங்களும் தி.ஜா காண்பித்த உன்னத பெண்களும் என் மனதில் கட்டியெழுப்பிய என் தேவதைப்பெண்ணுக்கு மணியம் செல்வனின் ஓவியங்கள் உயிரூட்ட, தேடல் தேடல் சதா தேடல்...  கண்ணில் காண்கின்ற பெண்களெல்லாம் எங்கோ பொருந்தி எதிலோ பொருந்தாமல் போக, இளமையென்னும் இழையொன்றில் நான் விரைந்து இங்குமங்கும் அலைய, காலமென்னும் மாய மை மெல்ல மெல்ல ஓவியத்தின் கோடுகளை அழிக்க, இன்று கூட என்னை கடந்து போன பெண்ணின் நெற்றி மட்டும் அதே ஓவிய நெற்றி. இன்னொரு நாளில் என்னிடம் பேசிச்சென்ற இன்னொரு பெண்ணில் அந்த கண்கள் மட்டும்... அழிந்து போன கோடுகள் விட்டுச்சென்ற உணர்வுகள் மட்டும் மனதில் அலையெழுப்பி தளும்ப தளும்ப, கோடுகள் அழிந்த அந்த இடைவெளி அனைத்தையும் இட்டு நிரப்பும் பேராசையில் சில முகங்களை ஏனோ திரும்ப திரும்ப பார்க்கத்தோன்றும். எத்தனை முகங்கள் கண்டாலும் அந்த முகம் ஆகாது எந்த முகமும்... காதலுக்கு முகமெதற்கு? என்ற புரிதல் வருவதற்கே தேவைப்பட்டது ஆண்டு அரை நூறு. நினைவில் எங்கோ காற்றில் நெற்றியில் புரள

கடல் இனி மெல்லச்சாகும்!

ஹேமமாலினி கன்னம் ஏன் இப்படி ஆச்சி? லாலு பீகார் முதல்வராக தந்த ஒரு வாக்குறுதி, 'எங்கள் சாலைகள் ஹேமமாலினி கன்னம் போல வழவழப்பாய் அமைப்போம்'. இது தேசம் முழுதும் வைரலாகி நாம் இழைத்து இழைத்து (ஒரு ஊத்தப்ப மாவில் நான்கு ரோஸ்டுகள் என்பதாக) மழித்து மழித்து சாலைகள் அமைத்தோம் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு. மழித்த ரோமங்களை நீர்நிலைகள், ஏரிகள், குளங்களில் இட்டு நிரப்பி அவற்றின்மீதும் ரோமாபுரியை நினைவுபடுத்தும் எழில்மிகு தூண்களும் மாட கோபுரங்களும் கொண்ட பல்லாயிர குடியிருப்புகளை வடித்தோம். பெருவணிகத்தின் துணையோடு இத்தனை குடியிருப்புகளும் வாங்கிக்குவித்து "வடித்ததை" கடலுக்கனுப்புவதற்கு புதிதாய் சுரங்கக்கால்வாய்கள் செய்தோம். அவற்றிலும் நெகிழி கழிவுகள் கவனமாய் கொட்டி அடைத்தோம். அடைப்பு பெருகப்பெருக நம் பொருளாதாரமும் வளர்வதாய் கண்டு 'ஒப்பிலாதொரு பொருளாதாரம் உலகத்திற்கொரு புதுமை!' என மார்தட்டி நம் வாழ்வின் தரமும் உயருவதாய் மகிழ்ந்து வெளி தேசங்களின் மதுக்குடுவைகளோடு உருண்டோம். உருண்ட குடுவைகளும் சுரங்கக்குழாய்களில் சரணடைய, அடைப்பும் வணிகமும் பொருளாதாரமும் பெருகுமுகமாகவே ஏறிப்போக, உல