ட்ராஃபிக் ஜாம். அனுமன் வால் போல வாகனங்கள் இருபுறமும். மையத்தில் ஏதோவொரு 'கடக்க இயலாத' நிகழ்வினால் தேக்கம் என உணர்ந்தேன். ஏற்கனவே புது சாலை அமைப்பதற்காக பழையதை கொத்திப்போட்டு, பயன்படுத்தக்கூடிய அகலமும் குறைவான சாலை. நிமிடங்கள் மெல்ல கரைய...வண்டிகள் எதுவும் நகர்வதாயில்லை. மட்டமதியான வெயில் மூட்டிய சினத்தில் காடெரிக்கும் உத்வேகத்தோடு வாகனத்தை நிறுத்தி இறங்கினேன், மையத்தை நோக்கி நகர்ந்தேன். ஒரு இளம் வயது பெண். இடுப்பில் ஒரு குழந்தை. உடைகளில் ஏழ்மை. சாலையின் ஒரு பகுதியில் நடந்துகொண்டிருக்கிறாள். அவள் பின்னால் அவளது வயதை ஒத்த ஒரு ஆண், அவளை தடுத்து நிறுத்தும் முயற்சியின் தொடர் தோல்வியில் துவளாது மறுபடி மறுபடி முயல்கிறான். மொத்த கூட்டமும் (நம்ம ஊரில் கூட்டம் கூடுவதை கேக்கணுமா என்ன?!) உறைந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அருகில் இருந்த வாகன ஓட்டிகள் யாரும் ஹார்ன் கூட அடிக்கவில்லை. நான்கு சுவர்களுக்குள் நிகழ வேண்டிய ஒரு நிகழ்வு, பொது வெளியில். அந்நியர் நுழைய முடியாத உறவென்பதாலோ, அவர்களுக்கிடையில் நிழையக்கூடிய சமாதான உறவுகள் இல்லாததாலோ, நடுத்தெருவில் துயரம் நிகழ்ந்து கொண்டிருந்தது. ச...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!