நீங்க என்ன சாதி? சாதி இரண்டொழிய வேறில்லை பாப்பா. நீங்க எந்த சாதி? நான் என் இளமையை நிறைத்த காலங்கள் எல்லாம் நம் தமிழ்நாட்டின் சிற்றூர்களிலும் கிராமங்களிலும் மட்டுமே. அங்கு எல்லாம் சாதி முஷ்டி முறுக்கல்கள் நான் பார்த்ததில்லை, ஒரு முறை கூட. எப்போதாவது செய்தித்தாள்களில் பதியப்பட்ட 'முதுகுளத்தூர் துப்பாக்கி சூடு' போன்ற சம்பவங்கள் இன்றுவரை நினைவில் இருப்பது இதனால்தான் (i.e. exception events) கல்லூரி கல்விக்காக பெருநகருக்கு வந்து அதன் பின் இன்னும் பெரிய நகரில் வேலைக்கு வந்து... வணிக ஓட்டம் பிடரியை உந்தித்தள்ள, ஓடத்தொடங்கும்போதும்கூட ஜாதி பற்றிய உரையாடல்கள் மேம்போக்காகத்தான் இருந்தன. ஒரு சராசரி மனிதனாக என் வாழ்வில் முதன்முதலாக பார்ப்பனீயம் is Bad என mainstream பேசுபொருள் கேட்டது 1990களி்ல்தான். சக்கிலியனெல்லாம் இன்னைக்கு ஆட்டம் போடுறான் என்ற mainstream முணகல்கள் தெற்கில் எழுந்ததும் இதன் பிற்பாடுதான். அந்த காலகட்டம்வரை, 'முன்னர் இழைக்கப்பட்ட சமூக அநீதிகளுக்கு இப்போது நாம் கொடுக்கும் விலை' என்பதாகவே சலுகைகள் அணுகப்பட்டன. பார்ப்பண துவேஷமென அரசியல் திராவிடம் வளர்த்தபோதும் அ...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!