முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிட்டு மண்ணும் பிட்யுமென் சாலைகளும்

பிட்டுக்கு மண் சுமக்க மறந்தவனையே பிரம்பால் அடித்த பூமி, இன்று பிட்யுமென் சாலைகளில் (தார் ரோடு) ஆற்று மணலை பெரு சக்கர வாகனங்களில் அள்ளி விரைவது இயல்புதானே! இந்திய நிலப்பரப்பில் பரந்து விரிந்து பரவி ஓட்டமாய் ஓடியும் கடலில் சென்று கலக்காத மிகப்பெரும் நதியாகவும் நம் தார் சாலைகளை நாம் கற்பிதம் செய்து பார்க்கலாமே... ஆற்று மணல் என்பது மலைகளின், மலைப்படுகைகளின் துகள்களால் ஆனது. நம் வீடு இந்த மணல் அன்றி உருப்பெறாது. சாலைகள் எங்கும் பெருசக்கர வாகனங்கள் கடத்தி வந்து தரும் மலைத்துகள்களில்தான் நாம் (வீட்டு) கோட்டைகள் கட்டி வாழ்கிறோம். இது தவறில்லை. ஏனெனில் நாம் மலைகளை வெடி வைத்து பிளந்து மணல் உற்பத்தி செய்வதில்லை :-) மழை நீரின் ஓட்டத்தில் மலைகளின் மேடு பள்ளங்கள், மணல் தங்குவதாலோ அல்லது அரித்துச்செல்லப்படுவதாலோ உருவாகும் இயற்கை நிகழ்வுகள். 'மை ப்ளேஸ் இன் த ப்ளைன்ஸ் ஈஸ் போரிங், பொல்யூட்டட், ஓவர்க்ரௌடெட். ஐ வான்ட் டு லிவ் / ஸ்டே இன் அ ரிசார்ட் டைப் ஹவுஸ் இன் அ ப்யூட்டிஃபுல் கொயட் ஹில் இன் த மிடில் ஆஃப் வைல்ட் நேச்சர்' என நாம் நம் சிறு ஆசையை வெளிப்படுத்த, அது 'அன...

மரக்கட்டிலில் உறங்கும் மனிதன்

மரக்கட்டிலில் உறங்கும் மனிதன் ------------------------------------------------------ எங்கோ பல மரத்தில் பழம் பறித்து உண்ணும் பறவைகள் இன்னொரு மரத்திலமர்ந்து களைப்பாறும் வேலையிலும், பசியாற்றிய மரங்களுக்கு செய்நன்றியாய், செரித்தது போக மிச்சத்தை மதிப்பு கூட்டி எச்சமாக்கி காற்றிடம் தரும். காற்று அதை கவனமாய் இடம் தேடி எங்கோ தரையிறக்கும். ஏதோ பறவை ஏதோ எச்சமென்றாலும் உள்ளிருப்பது நம் உறவினரே என அருகிலிருக்கும் மரங்கள் மகிழ்வாய் இலை உதிர்க்க, எச்சத்தினுள் உயிர்ப்புடனிருக்கும் விதை ஒன்றுக்கு (பலவாகவும் இருக்கலாம்) அரண் தரும், காக்கும். மரங்களின் வாழ்வியலில் நெகிழ்ந்து வான் நீர் சொரியும், கதிரலைகள் கதகதப்பாக்கும். 'என்ன ஒரு அமைப்பு இது!' என வியந்து விதைக்குள் கண்ணுறங்கும் இறை மெல்ல கண் விழித்து, தன்னை சூழ்ந்திருக்கும் நல்விழைவுகளை கண்டு அவற்றோடு இணையும் ஆவலில் விரைவாய் விதைக்கூடு விட்டு வெளியேறி காற்றில் இலை வீச ஏதுவாக சூல் கொண்ட மண் நெகிழ்ந்துகொடுக்கும்... இவை எதுவும் அறியாத சிறு பறவையொன்று பின்னொரு நாளில் விதை வளர்த்த அம்மரக்கிளையில் அமரும், தன் கூட்டில்...