ஒரு மாணவன் ஒரு கவிதை எழுதி தமிழாசிரியரிடம் காண்பிக்கிறான். ஆசிரியரும் வாசித்துவிட்டு, 'இங்கு தளை தட்டுகிறது. இந்த வரியில் சந்தம் வரவேண்டுமே...' என்று இலக்கணப்பிழைகளை பட்டியலிடுகிறார். மாணவனை திருத்தி எழுதச்சொல்கிறார். மாணவனும் அவ்வாறே திருத்தி எழுதி, படித்துப்பார்க்கிறான். இலக்கண சுத்தமாக சொற்கள் நிற்க, அவன் கவிதை மட்டும் தொலைந்து போயிருந்ததாம்! பல வருடங்கள் முன்பு கவிஞர் மகுடேசுவரனின் இந்த கவிதையை கணையாழி இதழில் வாசித்தேன். அதன் சாரமே இது. Perfect, Perfection என்கிற சொற்களுக்கு தமிழ்ச்சொற்கள் இல்லை தெரியுமா? முழுமையான என்கிற சொல்கூட complete என்கிற பொருளைத்தான் குறிக்கும். Flawless - குறையற்ற என்கிற சொல்லும் பொருந்தாது. A flawless fruit (shape, size, color, texture) may not be a perfect fruit:(taste, digestion etc...)! மரங்களில் கூட perfect tree என எதுவுமே கிடையாதாம். சுற்றுச்சூழலின் பல்லாயிரக்கணக்கான மாற்றங்களால் ஒவ்வொரு நொடியும் செதுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மரங்களில் எது perfect shape (symmetry may be an eye pleaser but nothing to do with perfection)? மனிதர்கள், நமக்கு...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!