"நீ இரு, நான் போகிறேன்". "You stay, I go" was my last words. "Ishi என்பது உனது பெயர்" என்றார் அந்த யாங்க்கீ (வெள்ளைக்காரர்). மௌனமாய் தலையசைத்தேன். பெயரில் என்ன இருக்கு? இதை இவருக்கு நான் எப்படி புரிய வைப்பேன்? என்னைச்சுற்றி எல்லோரும் யாங்க்கிகள். என் நிறத்தை ஒத்த, என் உருவத்தை ஒட்டிய யாரையும் நான் நெடுநாட்களாக கண்டதில்லை. கானகங்களின் பாதுகாப்பில் நான் வாழ்ந்த காலங்கள் மீண்டும் வருமா? அன்றொரு நாள், என் எஞ்சிய உறவுகள் மூவருடன் நான் அமைதியாய் உணவருந்த அமர்ந்திருந்தபோது திடீரென எங்களை யாங்க்கிகள் பலர் சுற்றி வளைக்க, நாங்கள் விலகி ஓடினோம், உடல் நலம் குன்றியிருந்த எம் மக்கள் ஒருவரை வேறு வழியின்றி விட்டு விட்டு. ஆளுக்கொரு திசையாய் பிரிந்து இருளிலும் உறை பனியிலும் அடர்காடுகளில் திரிந்து உயிர் வளர்த்தோம் அதன் பின்னர். இதோ இன்று காலையில் உணவு தேடி நான் இந்த கானக எல்லை வீட்டின் குதிரை லாயம் அருகே ஒளிந்திருந்தேன் ஏதேனும் உணவு கிடைக்கும் என. பிடிபட்டேன். தவறு என்ன செய்தேன் நான்? தெரியவில்லை. தவறு என்ன செய்தோம் நாங்கள்? பல நூறு ஆண்டுகளாய் எங்கள் மண்ணின் மடியில், மடிக்க...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!