முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இறை கனவு, பலிக்கட்டும்!

எண்ணமெல்லாம் வண்ணம் பல வண்ணம் நம் இயல்பிலேனோ பல வர்ணம். வர்ணங்கள் வண்ணங்களல்ல நிறங்களே வண்ணங்கள்! வர்ணபேத வாழ்வில் வண்ணங்களற்ற பொழுதுகளை எண்ணங்கள் கொண்டு நித்தம் கடப்போரை ரசம் மாறாது ரசிக்குது சாலைப்பூக்கள். கல்சாலை மண்சாலை நகரசாலை கிராமசாலை பெருநகர வீட்டின் சுற்றுச்சுவருள் ஒடுங்கி கோடிட்ட இடங்களில் பரவி நிற்கும் அலங்கார சாலை என சாலைகளிலும் வர்ணம் பல வர்ணம். இவையெங்கிலும் சளைக்காது வண்ணங்கள் மட்டுமே  சுமந்த கிண்ணங்களாய் நிற்குது மலர்க்கூட்டம், வண்ணங்களே கிண்ணங்களாய்... இந்த வண்ணங்களை அள்ளிப்பூச தெளித்துக்கொள்ள வழியில்லை எனினும் பார்த்து ரசிக்கலாம் வர்ணங்களை உதறி. சாலைகள் அற்ற வர்ணங்கள் அற்ற ஏன்? மனிதர்களற்ற சிறு பரப்பிலும் பூத்து நிற்கும் இந்த வண்ணக்குடுவைகள் யாரும் பார்க்காமலே! வானவில்லுக்கும் வண்ணங்கள் இங்கிருந்தே கிடைக்கிறதாம்! இறைவன் ஒருநாள் உலகை காண மலராய் வந்தாராம் கண்ணில் பட்ட மலர்களை எல்லாம் 'நலமா?' என்றாராம். "எங்கள் நலமும் எங்கள் வாழ்வும் மங்காத வண்ணங்களென சங்கே முழங்கு" என முழங்கி தலைவணங்கிய மலர்கள் கூட்டம் கூட்டமாய் இறையிடம் சொன்னது என்ன தெரியுமா? "ஐய