முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏகாந்தம்

மலை முகடு தாண்டி தீற்றலாய் வானம். நீலம். காலடி நடந்த தடமெங்கும் சூழும் மரங்களின் பச்சை. தொடுவானில் தொலையப்போகும் சூரியப்பந்தின் அந்தி வெளிச்சம் சிவப்பு. செங்குழம்பு தீயாகி  சுற்றியுள்ள பச்சையெல்லாம்  நீலமெல்லாம்  சிவப்பின் சாயல். சிவப்பை மெள்ள விழுங்கும் நீலம். நீலத்தை கவ்வும் இருள். இருளில் ஒளி உமிழும் ஆயிரமாயிரம் கண்கள், சுடராடும் கண்கள். குளிர் காற்று போர்வையாய் தழுவ, தாலாட்டும் சில்வண்டின் ஓங்காரம். ஏகாந்தம். ஏகத்தின் அந்தம். நாளை மற்றொரு நாளே, இன்றைய இரவு அப்படியல்ல!

2018ன் மிகச்சிறந்த Mainstream கவிதை!

இவரை ரசிக்கப்போனேன்... பாடலாசிரியர்: கார்த்திக் நேத்தா கரை வந்த பிறகே பிடிக்குது கடலை நரை வந்த பிறகே புரியுது உலகை நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே வாழா என் வாழ்வை வாழவே தாழாமல் மேலே போகிறேன் தீரா உள் ஊற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன் இங்கே இன்றே ஆழ்கிறேன் ஹே.. யாரோபோல் நான் என்னைப் பார்க்கிறேன் ஏதும் இல்லாமலே இயல்பாய் சுடர் போல் தெளிவாய் நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன் கண்ணாடியாய் பிறந்தே காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன் இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா.. நானே நானாய் இருப்பேன் நாளில் பூராய் வசிப்பேன் போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறுக்கிறேன் வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன் தோ…காற்றோடு வல்லூரு தான் போகுதே பாதை இல்லாமலே அழகாய் நிகழே அதுவாய் நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே ஓசை எல்லாம் துறந்தே காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன் திமிலேறி காளை மேல்