முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூப்பூக்கும் ஓசை

  தனிமையின் கால்கள் தேயும் சாலைகளில் உறங்கும் ஓசைகள் கூட கண்விழித்து எழுவதில்லை. தனிமையின் விரல்கள்  வருடும் இதயங்கள் ஏனோ எப்போதும் இரும்பு கவசங்களுக்குள் பதுங்கியே கிடக்கின்றன. இரும்பின் உரசல் தனிமையின் காதுகளில் பொத்தலிடும் கூச்சல், தனிமையின் விரல்கள் பொத்தினாலும் தீரா. தனிமையின் உடலில் புறக்கணிப்பின் தழும்புகள் தனித்தனியே மௌனமாய். தனிமையின் ராகம் யாருமற்ற நள்ளிரவில் தனித்த காரிருளில் தானே தேயும்,  தனிமையின் காதுகளில், காதுகளில் மட்டும். ராகமே துணையாய் மௌனமாய் துவளும் தனிமையின் கால்கள் தேயும் சாலைகளில் உறங்கும் ஓசைகள் கூட கண்விழித்து எழுவதில்லை. மேலிருந்து பார்த்திருக்கும் ஒற்றை நிலவு சுற்றிச்சுழலும் தனிமையில். அத்தனையும் மாறும் இந்தப்பூ பூக்கும் ஒற்றை நொடியில். யார் சொன்னது தனிமைக்கு துணையேதும் இல்லை என?!